டாஸ்மாக்கில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. ஒரே நாளில் யூடேர்ன்! காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வீரன் உள்ளிட்ட மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் தடை நீக்கப்பட்டுள்ளது. செயற்கை சுவையூட்டி சேர்ப்பால் 11 வகை மதுபானங்களுக்கு தடை விதித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனால் உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அளித்த அறிக்கையின்படி 11 மதுபானங்களுக்கு நேற்று தடை விதிக்கப்பட்டு இருந்தது.

தற்போது தடை விதிக்கப்பட்ட அடுத்த நாளே, 11 வகை மதுபானங்களுக்கான தடையை நீக்கலாம் என உணவு தரக் கட்டுப்பாடு ஆணையம் பரிந்துரை அளித்ததை அடுத்து ஒரே நாளில் 11 மதுபானங்களை டாஸ்மாக்கில் விற்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.

TASMAC liquor alcoholic beverages chennai


செயற்கை சுவையூட்டும் பொருட்கள்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு என்ரிகா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் மதுபானங்களை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் பூந்தமல்லி பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் கடந்த 11 ஆம் தேதி உணவு தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதில் குறிப்பிட்ட மதுபானங்களில் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு இருப்பது கண்டறியபட்டது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் 11-வகை மதுபானங்களின் விற்பனையை நிறுத்துமாறு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்தது.

ஒரே நாளில் தடை நீக்கம்

விஎஸ் ஒபி, எக்சைசா கோல்டு, பிராந்தி, லுயிஸ், வெர்னாண்ட், எக்ஸ்ஓ, பிரிமீயம் பிராந்தி, மெக்டொவெல்ஸ், விஎஸ்ஓபி பிராந்தி, நம்ப ஒன், ஹனி பீ பைன் பிராந்தி, என்ரிகா பிரிமியம், பிரெஞ்ச் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி, என்ரிகா ஒல்டு இண்டி கிளாசிக், டார்க் ரம் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த மதுபானங்கள் பலவற்றையும் விரும்பி மதுப்பிரியர்கள் குடித்து வந்த நிலையில் நேற்று கடைகளில் கிடைக்காததல் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில், தடை விதிக்கப்பட்ட மறுநாளே குறிப்பிட்ட 11 மதுபானங்களுக்கு தடை நீக்கப்பட்டுள்ளது.

11-வது மதுபானங்களுக்கான தடையை நீக்கலாம் என உணவு தரக்கட்டுப்பாடு ஆணையம் பரிந்துரை செய்த நிலையில், தடை நீக்கப்பட்டுள்ளது. செயற்கை சுவையூட்டி சேர்ப்பால் 11- வகை மதுபானங்களுக்கு ஒரே நாளில் தடை நீக்கப்பட்டது எப்படி என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+