தமிழகத்தில் நாளை 3 மணி நேரத்திற்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது
சென்னை: டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையொட்டி நாளை 3 மணி நேர கடையடைப்பு நடத்தப்படுகிறது.
தமிழக மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) நிறுவனத்தை தமிழக அரசே நேரிடையாக கடந்த 22 ஆண்டுகளுக்கு மேல் நடத்தி வருகிறது. 2003 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக அரசே நேரிடையாக பணியாளர்களை தேர்வு செய்கிறது.
அந்த வகையில் சுமார் 20000 பேர் பணியாற்றி வருகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் போன்ற அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

தற்போது 2026 பிப்ரவரி மாதத்தில் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் அருகில் எல்.ஜி. சாலையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் ஏற்கெனவே பல நாட்களாக நீடித்து வரும் நிலையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் போலீஸார் தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஊழியர்கள் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்கள். சிலர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகளில் வேலை செய்து வருகிறார்கள்.
எனினும் அவர்களுக்கு இதுவரை பணி பாதுகாப்பு இல்லாமல் இருந்து வருகிறது. எப்போது வேலை இழக்க நேரிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளனர். குறைந்தபட்சம் 480 நாட்கள் பணிபுரிந்தால் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தொழிற்சங்க சட்டங்கள் இருந்தும் அமல்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி அமைச்சர் போராட்ட குழுவின் தலைமையை அழைத்து பேசினார். இதில் 16 சங்கங்கள் கலந்து கொண்டன. அவர்களது கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி நல்ல முடிவுகளை தெரிவிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில் நாளை 9ஆம் தேதி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் முழுவதும் 3 மணி நேரம் அதாவது பிற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
திருச்சி தனியார் மதுக்கடைகளில் டாஸ்மாக் 10 ரூபாய் ஸ்டிக்கர்? துணை சபாநாயகர் ஆய்வில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications