தட்கல் டிக்கெட் புக் செய்ய இ-ஆதார் வெரிபிகேஷன்: எப்படி செயல்படும்? எப்போது முதல் அமலாகும்? விவரம்
சென்னை: தட்கல் டிக்கெட்டில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக பயணிகள் வைக்கும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆதார் அடிப்படையிலான வெரிபிகேஷன் செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த ஆதார் வெரிபிகேஷன் எப்படி செயல்பட வாய்ப்புள்ளது எப்போது முதல் அமல்படுத்த வாய்ப்புள்ளது? என்பது பற்றி வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து பார்க்கலாம்.
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது டிக்கெட் கிடைத்தால், ஏதோ லாட்டரியில் பரிசு அடித்துவிட்டது போல பயணிகள் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு தற்போது தட்கல் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. வெளியூர் பயணங்களுக்கு முன் கூட்டியே திட்டமிடாமல் கடைசி நேரத்தில் திட்டமிடும் பயணிகள் தட்கலில் டிக்கெட் எடுத்து பயணிக்க திட்டமிடுவது வழக்கம்.

ரயில்வே சூப்பர் நடவடிக்கை
ஆனால், சமீப காலமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பலருக்கும் டிக்கெட் கிடைப்பது இல்லை எனவும் புக் செய்யும் போது டிக்கெட் இருப்பது போல காட்டினாலும் பேமெண்ட் லெவலுக்கு வருவதற்குள் டிக்கெட் காலியாகிவிடும் சூழலே இருப்பதாக பயணிகள் பலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.
தட்கல் டிக்கெட்டில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக பயணிகள் பலரும் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில் தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூப்பர் நடவடிக்கை ஒன்றை ரயில்வே எடுத்துள்ளது. அதாவது, தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆதார் அடிப்படையிலான வெரிபிகேஷன் செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த ஆதார் வெரிபிகேஷன் எப்படி செயல்பட வாய்ப்புள்ளது எப்போது முதல் அமல்படுத்த வாய்ப்புள்ளது என்பது பற்றி வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து பார்க்கலாம்...
எப்போது அறிமுகம் செய்யப்படும்?
ஆதார் வெரிபிகேஷன் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்ய முடியும். மேலும், ஆதார் மூலம் வரும் OTP வைத்து டிக்கெட் புக் செய்வது கட்டாயமாக்கப்படும். டிக்கெட் வாங்குவதில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க, கவுன்ட்டர்களில் தட்கல் டிக்கெட் பெற ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தட்கல் டிக்கெட்டில் செய்யப்படும் இந்த இந்த மாற்றங்கள் மூலம், பயணம் செய்ய வேண்டிய உண்மையான நபர்களுக்குத் தேவையான நேரத்தில் டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். நடப்பு மாத இறுதியில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
ரயில்வே டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் வாங்கியவர்கள், ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் அல்லது 139 என்ற எண்ணுக்கு போன் செய்து ஆன்லைனில் டிக்கெட்டை ரத்து செய்யலாம். ஆனால், பணத்தை திரும்பப் பெற டிக்கெட் வாங்கிய இடத்திற்கு நேரில் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எப்படி செயல்படும்?
தட்கல் டிக்கெட் முன்பதிவு முறைகளில் உள்ள பிரச்சனைகளை நீக்கி, முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் இந்திய ரயில்வே இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்மூலம், யாருக்கு டிக்கெட் தேவையோ, அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யலாம்.
தட்கல் டிக்கெட்டில் ஆதார் வெரிபிகேஷன் என்பது ஓடிபி பெற்று பின்னர் அதை உள்ளீடு செய்து அடுத்த நடைமுறைக்கு செல்ல வேண்டும் என்றால் கூடுதல் நேரம் பிடிக்கும். இதற்குள் டிக்கெட்டுகள் அனைத்தும் காலியாக வாய்ப்பு உள்ளது என்பது பயணிகள் கருத்தாக உள்ளது. தட்கல் டிக்கெட்டை பொறுத்தவரை ஏசி பெட்டிகளுக்கு 10 மணிக்கும் ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு 11 மணிக்கு டிக்கெட் எடுக்க முடியும்.
பெரும்பாலும் டிக்கெட் முன்பதிவின் போது ஐஆர்சிடிசி சர்வர் பிரச்சினை ஏற்படுவது டிக்கெட் முன்பதிவுக்கு இடையூறாக உள்ளது. எனவே அவற்றை சரி செய்யலாம் என்பது பயணிகள் முன்வைக்கும் கருத்தாக உள்ளது. அதேநேரத்தில் ஆதார் வெரிபிகேஷன் அடிப்படையில் டிக்கெட் முன்பதிவு என்பது நல்ல ஆப்ஷன் தான் எனவும் இடைத்தரர்களை தவிர்க்க முடியும் என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications