தட்கல் டிக்கெட் முன்பதிவு ரூல்ஸ் மாறியது.. ரயிலில் பயணம் செய்ய ஓடிபி கட்டாயம்.. பயணிகளுக்கு நிம்மதி
சென்னை: ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில் தட்கல் டிக்கெட்டில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.. இந்த புதிய அறிவிப்பானது, ரயில் பயணிகளுக்கு நிம்மதியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது. அது என்ன?
தெற்கு ரெயில்வே பயணிகளுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீண்டதூர ரயில்களில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் ரயில்கள்தான் பெஸ்ட் & முதன்மை சாய்ஸ் ஆக உள்ளது.. அதுவும் நைட் நேரங்களில் ரெயில்களில் பயணம் என்பது எளிதானது, சௌகரியமானது..

இதனால் நீண்ட தூர பயணிகளுக்கு இரவு நேரங்களில் ரயில்களில் டிக்கெட்கள் கிடைப்பதில்லை.. இதற்காக முன்பதிவு செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
தட்கல் புக்கிங் ரூல்ஸ்
பயணிகளின் தேவை அதிகமானதால், ரெயில் டிக்கெட் முன்பதிவில் சில மோசடிகள் நடக்க தொடங்கின.. இது ரயில்வேயின் கவனத்துக்கும் சென்றது.. அதனால்தான், உண்மையான பயணிகளுக்கு மட்டுமே தட்கல் டிக்கெட் கிடைக்க, மோசடிகள் குறைக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இப்போது, பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, அவர்களின் செல்போனுக்கு அனுப்பப்படும் ஒருமுறை ஓடிபி சரிபார்க்கப்பட வேண்டும் என்றும், சரிபார்க்கப்பட்ட பிறகு மட்டுமே பயணிகள் டிக்கெட் புக் செய்ய முடியும் என்றும் புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது.. இந்த புதிய நடைமுறை இணையதளம், மொபைல் செயலி மற்றும் ரெயில்வே கவுண்டர் ஆகிய அனைத்து வழிகளிலும் பொருந்தும்.
டிக்கெட் முன்பதிவு ஓடிபி
தற்போது முதலில் 5 ரெயில்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் முன்பதிவு செய்யும் போது, அவர்களின் செல்போனில் வரும் ஓடிபியை சரிபார்த்த பிறகு மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும்.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை சென்டிரலில் இருந்து அகமதாபாத் செல்லும் நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12656), சென்னை சென்டிரலில் இருந்து ஹவுரா செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12656), சென்னை சென்டிரலில் இருந்து ஹவுரா செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (12842), சென்னை எழும்பூரில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22160), ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158) ஆகிய 5 ரெயில்களில் கடந்த 23-ந்தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கடவுச்சொல் சரிபார்க்கப்பட்ட பின்னரே டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டு உள்ளது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பயன்கள் - நன்மைகள்
ரயில்வேயின் இந்த அறிவிப்பானது, பயணிகளுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் எளிதான முன்பதிவு அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
அதுமட்டுமல்ல, இந்த புதிய முறை மூலம் உண்மையான பயணிகளுக்கு மட்டுமே தட்கல் டிக்கெட் கிடைக்கும், மோசடிகள் குறையும்,, பயணிகள் எளிதாக முன்பதிவு செய்யலாம். ரெயில்வே அதிகாரிகள் அனைவரும் இந்த முறையை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். பயணிகள் இதனால் பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையோடும் பயணம் செய்ய முடியும் என்றும் நம்பப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications