Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளம்புங்க.. ஊழியர்களை மிரட்டி Lay-Off செய்ய வைக்கும் ஐடி நிறுவனங்கள்.. மறைக்கப்படும் உண்மை பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் ஐடி நிறுவனங்களில் Lay-Off தீவிரமாக நடந்து வருகிறது. அதிக அனுபவம் உள்ள ஊழியர்கள், அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்கள் பலர் பணியில் இருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் UNITE அமைப்பின் இணை செயலாளர் சந்திரசேகர் ஆசாத் ஒன்இந்தியாவிடம் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். ஐடி ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அவர் கீழ்கண்ட நேர்காணலில் விளக்கி உள்ளார்.

டிசிஎஸ், அக்சென்ச்சர், மைக்ரோசாஃப்ட், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் திறன் மேம்பாடு மற்றும் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் தங்கள் நிறுவனங்களில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக அந்த நிறுவனம் பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளன. ஐடி துறையில் கடந்த 1 வருடத்தில் மட்டும் 15%க்கும் அதிகமாக சரிவு ஏற்பட்டு உள்ளது. அதாவது 15%க்கும் அதிகமாக கிளைண்டுகள் குறைந்து உள்ளனர். இந்தியாவில் உள்ள அசெஞ்சர், இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் வருவாயில் 11-18 சதவிகிதம் வரை இழந்து உள்ளன.

USA Donald Trump

ஐடி நிறுவனங்கள் பணி நீக்கம்

உலகளவில் சுமார் 2% ஊழியர்களை, அதாவது 12,261 பணியாளர்களை நீக்கும் TCS-ன் முடிவை UNITE என்ற ஐடி ஊழியர்களுக்கான சங்கம் எதிர்த்து புகார் செய்துள்ளது. இந்த பணிநீக்கங்கள் சட்டவிரோதமானவை என்றும், TCS தொழிலாளர் சட்டத்தை மீறிவிட்டதாகவும் UNITE குற்றம் சாட்டுகிறது. சட்டப்பூர்வமான முறையில் நியாயமான ஆட்குறைப்பு நடைமுறைகளைத் தவிர்ப்பதற்காக, ஊழியர்களை ராஜினாமா செய்ய நிறுவனம் வற்புறுத்தியதாக அவர்கள் புகார் வைத்துள்ளனர்.

TCS மிரட்டல்

பணிநீக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மத்திய மற்றும் மூத்த தரநிலை ஊழியர்களாவர். இவர்களில் பலர் 40 மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்கள். நீண்ட காலமாக இந்த பிரிவில் பணியாற்றுபவர்கள். NITES இந்த பணிநீக்கங்களின் சட்டபூர்வமான மற்றும் தார்மீக அம்சங்களை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான புகார்களை NITES பெற்றுள்ளது. பணிநீக்க அச்சுறுத்தல்கள், பண பலன்களை மறுத்தல் மற்றும் blacklisting செய்தல் போன்ற பல புகார்கள் இதில் வைக்கப்பட்டு உள்ளன. ஊழியர்களை ராஜினாமா செய்ய சொல்லி மிரட்டி, அவர்களுக்கு பணப்பலன் கொடுக்காமல் இந்த நிறுவனங்கள் ஏமாற்றுவதாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன.

எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்?

1. டிசிஎஸ் பணிநீக்கங்கள்:

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), 2025-26 நிதியாண்டில் சுமார் 12,000 ஊழியர்களை, அதாவது உலகளாவிய ஊழியர்களில் சுமார் 2% பேரை பணிநீக்கம் செய்யவுள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான தேவையின் அதிகரிப்பால், நிறுவனம் தற்போது மறுசீரமைப்பு திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

பணிநீக்கங்களைத் தவிர, 2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான டிசிஎஸ்-இன் பணிவிலகல் விகிதம் முந்தைய காலாண்டின் 13.3% ஐ விட, கடந்த பன்னிரண்டு மாதங்களில் 13.8% ஆக சற்று அதிகரித்துள்ளது.

2. கூகுள் பணிநீக்கங்கள்:

உலகளாவிய சர்ச் எஞ்சின் நிறுவனமான கூகுள், அதன் செயற்கை நுண்ணறிவு அமைப்பை விரைவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, வடிவமைப்பு தொடர்பான பணிகளில் இருந்த 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பில் தனது பலத்தை அதிகரிக்கவும், மற்ற துறைகளில் செலவுகளைக் குறைக்கவும் முயன்றபோது இந்த பணிநீக்கங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையில்தான் UNITE அமைப்பின் இணை செயலாளர் சந்திரசேகர் ஆசாத் ஒன்இந்தியாவிடம் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். ஐடி ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அவர் மேற்கண்ட நமது யூட்யூப் நேர்காணலில் விளக்கி உள்ளார்.

3. விப்ரோ பணிநீக்கங்கள்:

விப்ரோவில் அதிகாரப்பூர்வ பணிநீக்கங்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், செலவுத் திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த 24,516 வேலைகளை நிறுவனம் குறைத்துள்ளது.

2024-25 நிதியாண்டில், விப்ரோவின் பணிவிலகல் விகிதம் தொடர்ந்து 15% ஆகக் குறைந்துள்ளது, அதே நேரத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை 614 அதிகரித்து 2,33,346 ஆக உயர்ந்துள்ளது என்று முந்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இன்னும் பல நிறுவனங்களில் தொடர்ந்து இதேபோன்ற பணி நீக்கங்கள் நடைபெற்று வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+