திமுகவிற்கு எதிராக பொய்களை பரப்பி கேம் ஆடும் எதிரிகள்.. தகுந்த பாடம் புகட்டுங்கள்..ஸ்டாலின்
சென்னை: திமுகவிற்கு எதிராக பொய்யுரைகளை பரப்பி கேம் ஆடப்பார்க்கின்றனர். அப்படி பொய்யுரைகளை பரப்புவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல்முறை திமுக ஆட்சி அமைந்துள்ளது. மக்கள் நலப் பணிகள் மட்டுமின்றி கொள்கை ரீதியாகவும் பல்வேறு விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் குறித்த பயிற்சி பாசறை கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதில் திராவிட இயக்க வரலாறு, திராவிட இயக்க தலைவர்கள், திராவிட கொள்கைகள், திராவிடத்திற்கு எதிரான சக்திகளை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
திமுக இளைஞரணியை கொள்கை ரீதியாக வலுப்படுத்தும் வகையில் இத்தகைய ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த சூழலில் செப்டம்பர் மாதத்தை "திராவிட மாதம்" என்று கொண்டாட திமுக தகவல் தொழில்நுட்ப அணி முடிவு செய்தது. இதற்காக தினந்தோறும் ட்விட்டர் ஸ்பேசஸில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர்.

மு.க ஸ்டாலின் பேச்சு
திமுக இளைஞரணியை கொள்கை ரீதியாக வலுப்படுத்தும் வகையில் இத்தகைய ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த சூழலில் செப்டம்பர் மாதத்தை திராவிட மாதம் என்று கொண்டாட திமுக தகவல் தொழில்நுட்ப அணி முடிவு செய்தது. இதற்காக தினந்தோறும் ட்விட்டர் ஸ்பேசஸில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர். திராவிட மாதக் கொண்டாட்டத்தின் கடைசி நாளான இன்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ட்விட்டர் ஸ்பேசஸில் திராவிட அரசு என்ற தலைப்பில் பேசினார்.

திருத்தமுடியாது
எதையும் படிக்காமல் வாட்ஸ் அப்பில் படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் சொல்லி திருத்த முடியாது. இணையத்தில் இயங்கும் நீங்கள் உங்கள் காலத்தை ஆக்கப்பூர்வமாக செலவு செய்யுங்கள். நமது சாதனைகளை சொல்லுங்கள், நமது கொள்கையை சொல்லுங்கள் தவறான தகவலாக இருந்தால் அதற்கு உண்மையான தகவலை சொல்லுங்கள்.

மதவாத சக்திகள்
நமது எதிரிகள், மதவாத சாதியவாத சக்திகள் அவதூறு பேசுவார்கள் கொச்சையாக பேசுவார்கள், கோபப்படுத்த பேசுவர்கள், இவை அனைத்தையும் புறந்த தள்ளிவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம்" என்றார். ஒரு செய்தி பரவினால் அதை மாற்ற இன்னொரு செய்தி வர வேண்டும் என்கிற அவல நிலை தற்போது வந்து விட்டது. அந்த அளவிற்கு பொய்களை பரப்புகிறார்கள்.

பொய்யுரைகள்
கொள்கையில்லாதவர்கள் பொய்களை மட்டுமே வைத்து பிழைக்க நினைக்கின்றனர். திமுகவிற்கு எதிராக பல்வேறு அவதூறுகளை பரப்பி வருகின்றனர். திமுகவிற்கு எதிராக அவதூறு பரப்புபவர்களுக்கு கலைஞர் கருணாநிதி பதிலடி கொடுத்திருக்கிறார். திமுகவிற்கு எதிரான பொய் செய்திகளை ஐடி விங் சரியாக கையாளுகின்றனர். கடந்த காலங்களில் சில பிரிவுகள் நேரும் போது உணர்ச்சி வசப்பட்டு பேசியதை வைத்து சிலர் விளையாடிப்பார்க்கிறார்கள் என்றும் மு.க ஸ்டாலின் கூறினார்.

பாடம் புகட்டுங்கள்
அப்படி பேசுகிறவர்களின் காண்டாக்ட் என்னவென்று பார்க்காமல் கண்டென்ட் என்னவென்று மட்டும் பார்க்காதீர்கள். ஒருவர் அசிங்கப்படுத்தி விட்டார் என்று சொன்னால் அதை எடுத்துச்சொன்னவர் மேலேயே திருப்பிப்போட்டு கேம் ஆடலாம் என்று நினைக்கிறார்கள். அப்படி பொய்யுரைகளை பரப்புவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நம் மீதான அவதூறுகளுக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்










Click it and Unblock the Notifications