Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு.. வேலைக்கு வராவிட்டால் சம்பளம் இல்லை.. தமிழக அரசு முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த டிசம்பர் 26ம் தேதியில் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பணிக்கு வருகை புரியாமல் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 'நோ ஒர்க்-நோ பே' அடிப்படையில் ஊதியமில்லா விடுப்பு நாள், அதாவது 'சம்பளம் இல்லை' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டசபை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அடுத்தடுத்து போராட்டத்தில் குதித்தனர். அப்படி போராட்டம் நடத்தியதால் புதிய ஓய்வூதியம், செவிலியர்கள் பணி நிரந்தரம் உள்பட அவர்களுக்கு ஓரளவு நன்மையும் நடந்துள்ளது.

teachers who are protesting and not reporting for duty will not be paid TN Govt

சம வேலைக்கு சம ஊதியம்

அந்த வகையில், 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதியில் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி 5-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டது. எனினும் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை விட்டபாடில்லை. பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை. நேற்றும் தங்கள் போராட்டத்தை ஆசிரியர்கள் முன்னெடுத்தார்கள்.

அன்பில் மகேஷ் வேண்டுகோள்

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, "அரையாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. தேர்வு நேரம் நெருங்குவதால் மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு பள்ளிக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அவர்கள் தங்களது வழக்கமான கற்றல், கற்பித்தல் பணிகளில் ஈடுபட வேண்டும். பள்ளி நேரம் முடிந்ததும் அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யலாம் என்றும் ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்தார்.

கல்வித்துறை அதிரடி உத்தரவு

இப்படிப்பட்ட சூழலில், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட முடியாது என்று அறிவித்தனர். இதையடுத்து போராட்டம் தொடர்பாக தொடக்கக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்து இருக்கிறது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் நரேஷ் அனுப்பியுள்ள உத்தரவில் கூறுகையில், "தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறை முடிந்து 5-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.


'நோ ஒர்க்-நோ பே'

பள்ளி மாணவர்களுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகம், பாட நோட்டுகள் மற்றும் நலத்திட்டங்கள் உடனடியாக வழங்கப்பட்டு, அப்பாடப்புத்தகங்களை பெற்ற மாணவர்களுக்கு கற்றல்-கற்பித்தல் பணி உடனடியாக மேற்கொள்வதற்கு அப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியாமல் போராட்டத்தில் கலந்து கொண்டதால், மாணவர்களின் கல்வி நலன் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் மற்றும் ஒழுக்கம் குறையும் வாய்ப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

எனவே அரசு கடிதத்தில் பணிக்கு வருகை புரியாமல் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 'நோ ஒர்க்-நோ பே' அடிப்படையில் ஊதியமில்லா விடுப்பாக (அதாவது சம்பளம் கிடையாது) கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

விடுப்புக்கு அனுமதி இல்லை

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. அப்போராட்டத்தில் கலந்து கொண்டு பணிக்கு வராமல் உள்ள ஆசிரியர்களுக்கு (மருத்துவ காரணங்களால் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் வர இயலாதவர்களை தவிர) வேறு எவ்வகையான விடுப்பும் அனுமதிக்கக் கூடாது.

சம்பளம் இல்லை

அத்துடன் மேற்காணும் அரசுக் கடிதத்தின் படி பணிக்கு வராத காலத்தினை ஊதியமில்லா விடுப்பாக அனுமதித்து அவர்களின் வருகைப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டதை வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) உறுதி செய்யவேண்டும். கடந்த 5-ந்தேதி முதல் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் விவரங்களை தேதி வாரியாக பூர்த்தி செய்து தொடக்கக் கல்வித் துறையின் மின்னஞ்சல் முகவரிக்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்றும் போராட்டம்

கல்வித்துறையின் உத்தரவு நேற்று வெளியான சில நிமிடங்களில், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழுவினர் வெளியிட்ட தகவலில், '5 ஆயிரம் ஆசிரியர்கள் வரை சென்னையில் நாளை ( இன்று) கூடுகிறார்கள் என்பது அரசின் கவனத்துக்கு சென்றதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையெல்லாம் எதிர்பார்த்துதான் நாம் களத்தில் நிற்கிறோம். இதனை உடைக்க போராட்டத்தில் கட்டுக்கடங்காமல் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். அசையாத அரசாங்கத்தை அசைத்து பார்த்திருக்கிறோம். வெற்றி பெறும் வரை போராட்டம் உறுதியோடு செல்லும்' என்று பதிவிட்டிருக்கிறார்கள்.

ஆசிரியர்கள் சங்கம் தகவல்

முன்னதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட் நிருபர்களிடம் கூறுகையில், "கடந்த 5-ந் தேதி அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது எங்கள் முழு கோரிக்கைகளையும் அதிகாரிகள் கேட்டறிந்தனர். அப்போது, நிதித்துறையிடம் பேசிவிட்டு தகவல் சொல்கிறோம் என்றார்கள். ஆனால் இன்றுவரை எந்த தகவலும் இல்லை. எனவே, நாளை (இன்று) முதல் எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம்.

அன்பில் மகேஷ் அழைக்கவில்லை

அரசு மேலும் மேலும் எங்களை காயப்படுத்த கூடாது. இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எங்களை நேரில் அழைத்து பேசவில்லை. அதிகாரிகள் மட்டுமே பேசினார்கள். விரைவில் அமைச்சர் எங்களை அழைத்து பேசுவார் என்ற நம்பிக்கை உள்ளது" இவ்வாறு கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+