இது போதுமே.. நன்றாக செட்டான இந்திய அணி.. டிராவிட் - ரோஹித் செய்த மேஜிக்.. பயிற்சியில் என்ன நடந்தது?
சென்னை: இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடக்க உள்ள முதல் டி 20 போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.
Recommended Video
நியூசிலாந்துக்கு எதிராக மொத்தம் 3 டி 20 போட்டிகளில் இந்திய அணி ஆட உள்ளது. இந்திய டி 20 அணியின் கேப்டன் பதவியை கோலி ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து இந்திய அணியின் டி 20 கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
தற்போது இந்திய அணி வீரர்கள் இன்று நடக்கும் போட்டிக்காக தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். பல இளம் வீரர்களுக்கு அணிக்குள் இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டு மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது.

என்ன
இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்ட போது இரண்டு முக்கிய கேள்விகள் எழுந்தன. கேள்வி 1 - ராகுல் டிராவிட் மூத்த வீரர்களை எப்படி நடத்துவார். அவர் இளம் வீரர்களை கண்டிப்புடன் பயிற்சி செய்தவர். சாஸ்திரியோ மூத்த வீரர்களிடம் நட்பாக பழகும் குணம் கொண்டவர். அவர் கண்டிப்பு காட்ட மாட்டார். ஆனால் டிராவிட் அப்படி கிடையாது.

இரண்டாவது கேள்வி
கேள்வி 2 - டிராவிட் பயிற்சிக்கு கீழ் ரோஹித் ஆடியது இல்லை. ஐபிஎல் போட்டிகளில் கூட இவர்கள் நெருக்கமாக எங்கும் பழகியது இல்லை. இதனால் கேப்டன் - கோச் இடையிலான உறவு எப்படி இருக்கும் என்ற கேள்வி இருந்தது. இந்த கேள்வி எழ காரணம். இதற்கு முன் டிராவிட் போல கண்டிப்பான குணம் கொண்ட கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளர் ஆனார்.

மோதல்
அப்போது கோலிக்கும் கும்ப்ளேவிற்கும் இடையில் மோதல் வந்தது. இந்த மோதல் காரணமாக கும்ப்ளே கடைசியில் பதவி விலகும் நிலை ஏற்பட்டது. அதை போன்ற சம்பவம் மீண்டும் நடக்க கூடாது என்றே பலரும் டிராவிட்டின் நியமனத்திற்கு பின் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில்தான் இரண்டு கேள்விக்கும் கடந்த இரண்டு நாள் பயிற்சியில் பதில் கிடைத்துள்ளது.

பதில்
அதன்படி டிராவிட் இந்திய அணியின் மூத்த வீரர்கள், இளம் வீரர்களோடு நன்றாக செட்டாகிவிட்டார். கண்டிப்பு காட்டினாலும் கூட இவர்களுக்கு இடையிலான எந்தவிதமான உரசலும் இதுவரை இல்லை. வீரர்களும் டிராவிட் பயிற்சிக்கு கீழ் இயல்பாகவே இருக்கிறார்கள். அதோடு பண்ட், சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷான், சிராஜ் போன்ற வீரர்கள் பலர் ஏற்கனவே டிராவிட் பயிற்சிக்கு கீழ் ஆடியவர்கள். இதனால் அவர்கள் டிராவிட் வருகையால் பெரிய மாற்றத்தை சந்திக்கவில்லை.

இயல்பு
பல வருடம் அண்டர் 19 அணியை பயிற்சி அளித்தவர் என்பதால் வீரர்களின் தனிப்பட்ட பங்களிப்பு, ரெக்கார்ட் அனைத்தையும் தெரிந்து கொண்டு டிராவிட்டும் பயிற்சி கொடுத்து வருகிறார். இதனால் இந்திய அணி புதிய கோச் டிராவிட்டுடன் நன்றாக செட்டாகிவிட்டது. அதேபோல் இரண்டாவதாக ரோஹித் - டிராவிட் இருவரும் நல்ல இணையாக தோற்றம் அளிக்கிறார்கள். கும்ப்ளே - கோலி போன்ற மோதலுக்கான அறிகுறிகள் தெரியவில்லை.

ரோஹித்
நேற்று நாள் முழுக்க ரோஹித் - டிராவிட் இருவரும் ஆலோசனை செய்தனர். ரோஹித் பேட் செய்த போது டிராவிட் த்ரோ செய்தார். அதேபோல் இவர்களிடம் ஆரம்பத்திலேயே ஒரு கெமிஸ்ட்ரி வந்துவிட்டது. நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூட 2007ல் ரோஹித்தை சந்தித்தது பற்றி சுவாரசியமாக சிரித்தபடி இவர்கள் பேசினார்கள். இதனால் ரோஹித் - டிராவிட் இடையே கோலி - சாஸ்திரி இடையே இருந்ததை போன்ற கெமிஸ்ட்ரி ஏற்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல செய்தி
நேற்று பயிற்சியிலும் இந்த கெமிஸ்ட்ரி வெளிப்படையாக தெரிந்தது. மீண்டும் கோலி வரும் பட்சத்தில் ஒருநாள் அணியில் அவர் கேப்டனாக நீடித்தால் டிராவிட்டுடன் இணக்கமாக செல்ல வேண்டும். ஆனால் கோலி ஒருநாள் அணி கேப்டன்சியையும் ராஜினாமா செய்ய போவதாக வெளியாகும் தகவலால் பெரும்பாலும் அதிலும் ரோஹித்தே கேப்டனாக அறிவிக்கப்படுவார். இது இந்திய அணிக்குள் வரும் நாட்களில் ரோஹித் - டிராவிட் காம்போ பெரிய மேஜிக் நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications