பயணிகளுக்கு குட் நியூஸ்..தேஜஸ் ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்..தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னைவாசிகளின் நீண்ட நாட்கள் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வேதுறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை 26 ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து மதுரைக்கு அதிவேக ரயிலான தேஜஸ் ரயில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. அதிநவீன வசதிகளுடன் இயக்கப்பட்டுவரும் இந்த ரயில், பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காலை டீ, காபி, படிப்பதற்கு தமிழ், ஆங்கில செய்தி தாள்கள், சிற்றுண்டி போன்றவை வழங்கப்படுகிறது.

சென்னையில் இருந்து மதுரைக்கு 6 மணிநேரத்தில் செல்லும் இந்த தேஜஸ் ரயில் திருச்சி ஜங்சனில் மட்டுமே நின்று செல்லும். தேஜஸ் ரயில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டுமென பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துவந்தனர். இதுதொடர்பாக தெற்கு இரயில்வேயின் மதுரைக் கோட்டத்திற்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்திலும் சு.வெங்கடேசன் எம்பி கோரிக்கை விடுத்திருந்தார்.
சொகுசு வசதிகள் இருந்தாலும் அதிக கட்டணம் என்பதால் தேஜஸ் ரயிலில் பல மாதங்களாக 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பாமல் காலியாக இயக்கப்பட்டது தெரியவந்தது. சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த தயானந்த கிருஷ்ணன் என்பவர், கடந்த ஆண்டு தகவல் உரிமை சட்டத்தின் கீழ், தேஜஸ் ரயிலில் 2019 முதல் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் வரை மாதந்தோறும் எவ்வளவு இடங்கள் நிரம்பின என்பது உள்ளிட்ட பல கேள்விகளைக் கேட்டிருந்தார்.
மறுமார்க்கமாக, சென்னைக்கு இயக்கப்பட்ட தேஜஸ் ரயிலில் பல மாதமாக இடங்கள் நிரம்பாமல் இருந்துள்ளது. இதன்மூலம், ரயில்வேக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வருவாய் இழப்பை தவிர்ப்பதோடு, தாம்பரம் பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயிலை நிறுத்த ரயில்வே வாரியத்துக்கு 2019 - 2020 காலகட்டத்தில் 6 முறை பரிந்துரைக் கடிதங்களை அதிகாரிகள் அனுப்பினர். அதற்கு ரயில்வே வாரியத்திடம் இருந்து ஒப்புதல் கிடைக்காமல் இருந்தது.
இது குறித்து தகவல் உரிமைச் சட்டம் மூலம் விவரம் பெற்ற, பொறியாளர் தயானந்த கிருஷ்ணன் கூறும்போது, தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென் மாவட்ட மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இந்த மக்களின் சொந்த ஊர் பயணத்துக்கு தேஜஸ் ரயில் மிகப்பெரிய உதவியாக இருக்கும். எனவே, தேஜஸ் ரயிலை தாம்பரத்தில் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கூறினார்.
தாம்பரத்தில் தேஜஸ் ரயிலை நிறுத்துவது தொடர்பாக ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக ரயில்வே வாரியம் முடிவு எடுக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னைவாசிகளின் நீண்ட நாள் கோரிக்கை ஆன,சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை 26 ஆம் தேதி முதல் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். சென்னைவாசிகளின் நீண்ட நாள் கோரிக்கை ஆன, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும். தமிழக மக்களின் சார்பில் கொடுத்த கோரிக்கையை ஏற்று உத்தரவு வழங்கிய மாண்புமிகு மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அவர்களுக்கு நன்றி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications