Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம், நகைகள்.. மருமகன் வீட்டு முன்பு மாமியார்.. மகளின் உடலுடன் சென்று எந்த தாயும் செய்யாத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரதட்சணை விவகாரம் இன்றைக்கு இந்தியா முழுவதுமே பெரிய சிக்கலாக இருக்கிறது. வரதட்சணை என்பது வாங்குவது குற்றம் என்றால்.. கொடுப்பதும் குற்றம் தான்... ஆனால் நடைமுறையில் இரண்டுமே எதார்த்தமாக இருக்கிறது. என்ன சட்டம் போட்டாலும், வரதட்சணை விவகாரத்தில் பெரிய மாற்றங்கள் வரவே இல்லை.. தெலுங்கானா மாநிலத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி பிரிந்த நிலையில், விபத்தில் மனைவி காலமானார். இந்நிலையில் மகளின் உடலுடன் சென்று வரதட்சணையை கேட்டு தாய் போராடியுள்ளார்.

வரதட்சணை கேட்பதும், வாங்குவதும் குற்றம் என்பது சட்டத்தில் தான் இருக்கிறது.. நடைமுறையில் அப்படி இல்லை.. ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்பட தென் மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் வரதட்சணை என்பது மிக இயல்பான ஒன்றாக இருக்கிறது. வரதட்சணை கொடுக்காமல் யாரும் திருமணம் செய்வதே இல்லை.. அதாவது தாங்களாகவே முன்வந்து மகளுக்கு தேவையான வசதிகளைசெய்து தருவதுடன், தங்க நகை, வீடு, நிலம், வாகனம் போன்றவற்றை அளிக்கிறார்கள்..

Telangana dowry What did the mother-in-law do to get back the dowry including gold and jewellery

ஆடம்பரம்

எத்தனை பவுன் நகை போட்டோம் என்பது இங்கே கவுரவமாக பார்க்கிறார்கள். பெருமைக்காக பலர் செய்கிறார்கள். மகளுக்கு சொத்தில் பங்கு உள்ளது என்கிற நிலையில், இருக்கும் எதார்த்தப்படி இல்லாமல், ஆடம்பரத்திற்காகவும், பந்தாவிற்காகவும் பலர் மகள்களின் வாழ்க்கையை பணயம் வைக்கிறார்கள். அதேநேரம் பொய்யான வரதட்சணை புகார்களும் உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

தெலுங்கானாவில் சம்பவம்

தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் ராமகிருஷ்ணாபூர் நகரத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த 25 வயதாகும் லாவண்யா என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு கல்யாணம் நடந்தது. சுரேஷ் அந்த பகுதியில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமணத்தின்போது லாவண்யாவின் பெற்றோர் அதிக அளவில் வரதட்சணை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கருத்துவேறுபாடு காரணமாக லாவண்யா கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்திருக்கிறார்.

மருமகன் வீட்டிற்கு சென்றார்

இதற்கிடையே லாவண்யா கடந்த ஜூலை 16-ந் தேதி தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி அவரது தந்தை இறந்தார். படுகாயம் அடைந்த லாவண்யா சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் கடந்த 24-ந் தேதி இறந்தார். பிரேத பாிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை ஆம்புலன்ஸ் மூலமாக லாவண்யாவின் கணவர் சுரேஷ் வீட்டுக்கு உறவினர்கள் எடுத்து சென்றனர்.

வரதட்சணையை திரும்ப கேட்டு போராட்டம்

திருமணத்தின்போது கொடுத்த வரதட்சணையை திரும்ப கொடுத்தால்தான் பிணத்தை எடுத்துச்செல்வோம் என்று கூறி லாவண்யாவின் தாயார், உறவினர்களுடன் போராட்டம் நடத்தினார். 2 நாட்களாக மகளின் உடலுடன் போராட்டம் நடத்திய தாயாரிடம், போலீசார் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பின்னர் மகளின் உடலை எடுத்துச்சென்று அவரது தாயார் இறுதிச்சடங்கு செய்தார். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+