கசப்பில் முடிந்த டேட்டிங்.. சீரியல் ஷூட்டிங்கிலேயே.. அடித்துக்கொண்டு நடிகர் - நடிகை.. கடுப்பான டீம்!
சென்னை: சமீபத்தில், தமிழ் தொலைக்காட்சி தொடரொன்றில் பணியாற்றும் ஒரு நடிகை - நடிகர் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்த விவகாரம், ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் படப்பிடிப்பு தளத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறபடுகிறது. பிரபலமான தொடரின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதற்கு இதுவே காரணம் எனக் கூறப்படுகிறது.
பிரபலங்களின் மோதல்: காரணம் என்ன?
தகவல்களின்படி, புகழ்பெற்ற அந்த குடும்ப நாடகத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர், சக நடிகையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்பிலிருந்து வெளியேறியுள்ளார். இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக வெளியான ஏற்கனவே வந்ததிகள் வந்தன. அவர்கள் அடிக்கடி ஒன்றாக வெளியே சுற்றும் கதைகள் வெளியே வந்தன. இந்த நிலையில் இந்த டேட்டிங் + காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது.. இதுவே படப்பிடிப்பு தளத்தில் மோதலாக முடிந்தது என்கிறார்கள்.
நடிகை, சமீபத்தில் ஒரு பெரிய பட்ஜெட் தொடரில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றார். இதனை நடிகருடன் பகிர்ந்து கொள்ளாததே சண்டைக்கான காரணமாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே ஈகோ மோதல்கள் ஏற்பட்டதாகவும், உறவு ஏற்கனவே பலவீனமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த தொடரின் மொத்த படக்குழுவும் இருவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறதாம்.
இருவரும் நெருக்கமாகப் பழகி வந்ததாகவும், அடிக்கடி ஒன்றாக ஜிம்மில் பயிற்சி செய்வது, உணவகங்களுக்குச் செல்வது மற்றும் ஒரே காரில் பயணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள், "நாங்கள் நண்பர்கள் மட்டுமே" என்று கூறியிருந்தாலும் கூட, திரைத்துறையில் பல்வேறு யூகங்கள் நிலவி வந்தன. தற்போது ஏற்பட்ட மோதல், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சீரியல் வட்டாரத்தின் தகவல்படி, தயாரிப்புக் குழுவினர், இந்த விவகாரத்தை வெறும் கருத்து வேறுபாடு என்று சொல்ல முடியாது. அவர்கள் காதலில் எதோ பிரச்சனை. அதனால் தேவையின்றி ஷூட்டிங் தடைபடுகிறது. அவர்கள் இல்லாத காட்சிகளை இப்போது எடுத்து வருகிறோம்.
நடிகையின் புதிய ஒப்பந்தம் காரணமாக நடிகருக்கு ஏற்பட்ட பொறாமையே உண்மையான காரணம் என்று கூறப்படுகிறது. நடிகர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வாரா அல்லது தொடரிலிருந்து விலகுவாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பின்போது, நடிகை ஒப்பனை அறையில் நடிகரை சந்தித்தார். அப்போது தொடங்கிய உரையாடல் விரைவில் சத்தமாக மாறி, பார்க்கிங் பகுதி வரை சென்றது. அதன் பிறகு நடிகர் படப்பிடிப்பை விட்டு வெளியேறினார். இதனால் அன்றைய படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

படிப்பிடிப்பு நிறுத்தம்
தற்போது நடிகர், படப்பிடிப்புக்கு வரவில்லை. இதன் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகக்கூடும் என்ற வதந்திகள் பரவி வருகின்றன. தொலைக்காட்சி நிறுவனம் இந்த விவகாரத்தை அமைதியாக வைத்திருக்க முயற்சிக்கிறது. ஆனால், தயாரிப்புக் குழுவினர் மாற்று நடிகர்களைப் பற்றிய ஆலோசனையை ஆரம்பித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது
இந்த விவகாரம், இருவருக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருத்து வேறுபாடுகள் விரைவில் தீர்க்கப்படுமா அல்லது தொடரில் மாற்றங்கள் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்களுக்கு இடையேயான இந்த மோதல், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அவர்கள் ஒன்று சேர்ந்து, மீண்டும் நடிப்பைத் தொடங்குவார்களா அல்லது வேறு ஏதாவது மாற்றங்கள் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications