உண்டியலில் விழுந்த செல்போன்.. ரூ.10,000 கட்டிய பிறகு கொடுத்து அனுப்பிய அறநிலையத்துறை!
சென்னை: திருப்போரூர் முருகன் கோயிலில் சில நாட்களுக்கு முன்னர் தரிசனம் செய்த தினேஷ் என்பவரின் செல்போன் தவறி உண்டியலில் விழுந்திருக்கிறது. இதனையடுத்து செல்போனை இன்று அவர் ரூ.10,000 கட்டி ஏலத்தில் மீட்டு எடுத்திருக்கிறார்.
கோயிலில் தவறி விழுந்த பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து பலரும் குரல் எழுப்பிய நிலையில், மொபைல் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் ரூ.10,000 கட்டிய பிறகுதான் செல்போன் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

உண்டியலில் விழுந்த செல்போன்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்போரூர் முருகன் கோயிலில் கடந்த அக்டோபர் மாதம், சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் சாமி தரிசனம் செய்திருந்தார். தரிசனத்திற்கு பிறகு உண்டியலில் காணிக்கை செலுத்த முயன்றபோது அவர் வைத்திருந்த ஐபோன் தவறி உண்டியலில் விழுந்திருக்கிறது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட அவர், கோயில் நிர்வாகத்திடம் செல்போனை திரும்ப கேட்டிருக்கிறார். ஆனால், "உண்டியலில் விழுந்தது அனைத்தும் முருகனுக்கே" என்று கோயில் நிர்வாகம் கறாராக கூறிவிட்டது.
மட்டுமல்லாது உண்டியலை எங்களால் திறக்க முடியாது. என்று கூறி, இந்து சமய அறநிலையத்துறையை அணுக வழிகாட்டியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை:
சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் இது குறித்து எழுத்துப்பூர்வமாக தினேஷ் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அங்கும் அதிகாரிகள் அசைந்து கொடுக்கவில்லை. கோயில் நிர்வாகம் சொன்னதையே அறநிலையத்துறையும் பிரதிபலித்தது. இருப்பினும் தினேஷ் விடுவதாக இல்லை. தொடர் கோரிக்கையையடுத்து அறநிலையத்துறை ஓரளவுக்கு இறங்கி வந்தது. அதாவது, உண்டியல் திறக்கப்படும் நாளில் செல்போனிலிருந்து டேட்டாக்களை மற்றும் மாற்றிக்கொள்ளலாம் என்றும், மற்றபடி செல்போன் முருகனுக்கே என்று பழைய பாட்டையே பாடியது.
அமைச்சர் சேகர்பாபு பதில்:
இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், என்ன வாய்ப்பு இருக்கிறது என்பதை ஆய்வு செய்துவிட்டது பிறகு முடிவெடுத்து தெரிவிப்போம் என்று கூறினார். இதனையடுத்து அவர் செல்லும் இடமெல்லாம் இந்த கேள்விகள் எதிரொலித்தன. இறுதியாக கடந்த 5ம் தேதி, "இந்த ஆட்சி மக்களுக்கு கொடுக்கிற ஆட்சி. எடுக்கிற ஆட்சி கிடையாது. எனவே பக்தரின் செல்போன் திரும்ப ஒப்படைக்கப்படும்" என்று சேகர்பாபு உறுதியளித்திருந்தார்.

ஏலத்தில் எடுக்கப்பட்ட செல்போன்:
இதனையடுத்து இன்று உண்டியல் திறக்கப்பட்டு, உள்ளே இருந்த செல்போன், அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏலத்தில் விடப்பட்டது. அதில் ரூ.10,000 கட்டி அதன் உரிமையாளர் தினேஷ் என்பவர் ஏலத்தில் எடுத்திருக்கிறார். எப்படியோ செல்போன் கிடைத்தால் போதும் என்று இருந்த தினேஷ், தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சோஷியல் மீடியாக்களில் எழும் கேள்வி:
கொடுப்பதுதான் எங்கள் அரசு என்று அமைச்சர் சொன்னதை மேற்கோளிட்டு, செல்போனை உரிமையாளரிடம் பணம் பெறாமல் கொடுத்திருக்க வேண்டியதுதானே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தினேஷ் ஒரு பக்தர், தவறுதலாகதான் செல்போன் விழுந்திருக்கிறது. அதை முருகன் ஒன்றும் எடுத்து பயன்படுத்தப்போவதில்லை. அவர் பெயரை சொல்லி செல்போனை கொடுக்க மறுத்ததுடன், நீண்ட இழுத்தடிப்புக்கு பின்னர்தான் கொடுத்திருக்கிறீர்கள். தவறி விழுந்த பொருளை அப்போதே உரியவரை அழைத்து கொடுப்பதுதானே அறம்? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.
நீங்க என்ன சொல்றீங்க மக்களே? அறநிலையத்துறையின் விதிமுறைகள்படி கொடுத்தது சரியா?
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications