கோயில் நிலம் ஆவணங்கள்: தமிழக கோவில் சொத்து விவரங்களை இணையத்தில் வெளியிடுவதில் என்ன தடை: ஹைகோர்ட்
சென்னை: தமிழ்நாட்டிலுள்ள கோவில்கள் தொடர்பான டெண்டர்கள், ஒப்பந்தங்கள், நிலங்கள் தொடர்பான பதிவேடுகள் போன்றவற்றை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இந்து அறநிலையத்துறை வெப்சைட்டில் வெளியிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீது முக்கிய உத்தரவு ஒன்றினை சென்னை ஹைகோர்ட் பிறப்பித்திருக்கிறது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக மொத்தம் 44121 கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இவைகளில் 8,450 கோயில்கள் நூறு வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்டவை.

அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களுக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்கும்நிலையில், பெருமளவு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன..
கோயில் நிலங்கள் மீட்டெடுப்பு
எனவேதான், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. எனவே, கடந்த 2021ல் மாநிலம் முழுவதுமிருந்து கோயில் நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக சென்னை ஹைகோர்ட் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.
இதுகுறித்து நடந்த விசாரணையின்போது, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும், அந்த நிலங்களுக்கு வாடகை நிர்ணயிக்க வேண்டும், கோயில் நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும், கோயில் நிலங்கள் தொடர்பான மனுக்களை விசாரிக்க தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும், கோயில் சிலைகள், நகைகள் குறித்த விவரங்களை பட்டியல் போட வேண்டும் என்றெல்லாம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆவணங்கள் பதிவேற்றம்
இதற்கு பிறகுதான், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைகள் துரிதமாக ஆரம்பமாகி நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், கோயில் நிலங்கள் தொடர்பான மற்றொரு வழக்கு சென்னை ஹைகோர்ட் வரை சென்றுள்ளது.. அதாவது தமிழகத்திலுள்ள கோவில்கள் தொடர்பான டெண்டர்கள், ஒப்பந்தங்கள், நிலங்கள் தொடர்பான பதிவேடுகள் போன்றவற்றை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இந்து அறநிலையத்துறை வெப்சைட்டில் வெளியிட வேண்டும் என்று டி.ஆர். ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சொத்துக்கள், ஆவணங்கள்
இந்த வழக்கானது நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து அறநிலையத் துறை சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் இதுகுறித்து வாதிடும்போது, கோவில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் முறைகேடு செய்வதற்கான வாய்ப்புள்ளது..
ஏற்கனவே வருவாய் துறையின் தமிழ் நிலம் என்ற வெப்சைட் செயல்பாட்டில் உள்ளது. அந்த இணையத்திலேயே நிலத்தின் வகைப்பாடு குறித்து அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கின்றன.. இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் தயாராக உள்ளோம். ஏற்கனவே ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இதேபோல் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது என்றார்.
நீதிபதி அதிரடி உத்தரவு
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, கோவில் தொடர்பான விவரங்களை வெளியிட என்ன தடை இருக்க போகிறது? இது தொடர்பாக ஒரு முறையான திட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூறி, இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 12ம் தேதிக்கு தள்ளிவைத்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications