ரெடியான சிறப்பு பேருந்துகள்.. சென்னையில் அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையங்கள்.. குட் நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவராத்திரி, துர்கா பூஜா போன்ற பண்டிகை நாட்களில் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

பொதுமக்கள் வசதிக்காக ஞாயிறு வரை தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பல்வேறு ஊர்களுக்கு செல்லும் வகையில் இந்த பேருந்துகள் அமைக்கப்பட்டு உள்ளன. தாம்பரம் மெப்ஸ், பூவிருந்தவல்லி பைபாஸ், கோயம்பேடு ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளன.

Temporary bus stands set up in Chennai: Special buses announced for festivals and weeks ends

தாம்பரம் மெப்ஸ் (MEPZ) பேருந்து நிறுத்தம் பகுதியில் இயக்கப்படும் பேருந்துகள்: திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள். போளூர், சேத்பட்டு. வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள். மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர். சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

பூவிருந்தவல்லி பைபாஸ் மா.போ.க. பூவிருந்தவல்லி பணிமனை அருகில் இருந்து செல்லும் பேருந்துகள்: வேலூர், ஆரணி, ஆற்காடு. திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்: மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி ECR), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு. ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு பேருந்து: பொதுவாக நீண்ட விடுமுறை வரும் போதெல்லாம் தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் விடப்படுவது வழக்கம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

பொங்கல் பேருந்து: கடந்த பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல் கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,183 பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இந்த நிலையில்தான் தற்போதும் சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளன. அதேபோல் சென்னைக்கு திரும்ப பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த முறை பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவராத்திரி, துர்கா பூஜா உள்ளிட்ட பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+