Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈஸ்வரியின் சோழிங்கநல்லூர் வீட்டு வாடகை எவ்வளவு தெரியுமா? ரூ1000 கூட குறைக்காத ஐஸ்வர்யாவின் "பினாமி"

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய பணத்தில் சோழிங்கநல்லூரில் 3 அடுக்கு வீட்டை வாங்கிய பணிப்பெண் ஈஸ்வரி, வாடகைதாரர்கள் கெஞ்சி கேட்டும் ரூ 1000 கூட குறைக்காமல் கறார் காட்டினாராம்.

கடந்த 2006ஆம் ஆண்டு ரஜினிகாந்த் வீட்டில் பணிக்கு சேர்ந்தவர் ஈஸ்வரி. இவர் மந்தைவெளியில் உள்ளார். இவருடைய கணவர் அங்கமுத்து, இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஈஸ்வரி ரஜினிகாந்த் வீட்டில் வேலை பார்த்த போதே ஐஸ்வர்யாவுடன் நெருங்கி பழகியுள்ளார். அவர் மீதும் அவருடைய குழந்தைகள் மீதும் மிகுந்த அக்கறை உள்ளவர் போல் நடித்துள்ளார். இதை ஐஸ்வர்யாவும் நம்பியுள்ளார்.

ஈஸ்வரி

ஈஸ்வரி

இதனால் ஈஸ்வரியை தனது குடும்பத்தில் ஒருவராகவே ஐஸ்வர்யா ரஜினியும் , அவருடைய தந்தை குடும்பத்தினரும் பார்த்துள்ளனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார் ஈஸ்வரி. அதாவது ஐஸ்வர்யா இயக்குநரானதும் ஷூட்டிங், பட வேலைகளுக்காக அவ்வப்போது வெளியே போக வேண்டிய சூழல் நிலவியது. இதனால் தனது குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் ஈஸ்வரியை முழுவதுமாக நம்பினார்.

ரத்தினக் கற்கள்

ரத்தினக் கற்கள்

வைரம், ரத்தினக் கற்கள், பழமையான நகைகள் கொண்ட லாக்கரை ஈஸ்வரி கண் முன்பே அலமாரியில் ஐஸ்வர்யா வைத்திருந்தார் என்கிறார்கள். இன்னும் சிலர் ஈஸ்வரியிடமே அந்த லாக்கரின் சாவி இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யா, ரஜினி குடும்பத்தினர் வைத்திருந்த ஒட்டுமொத்த நம்பிக்கையையும் ஈஸ்வரி சீர்குலைத்துவிட்டார். 2019 ஆம் ஆண்டு முதல் அடுத்ததாக ஐஸ்வர்யா நகையை அணியும் அளவுக்கு வீட்டில் எந்த விழாவும் இல்லை என கருதிய ஈஸ்வரி தன் கைவரிசையை காட்டத் தொடங்கிவிட்டார்.

 60 சவரன் நகைகள்

60 சவரன் நகைகள்

2019 ஆம் ஆண்டு முதல் சிறுக சிறுக 60 சவரன் நகைகளை திருடினார் ஈஸ்வரி. அதை விற்று தனது கணவரின் பெயரில் வங்கிக் கணக்கில் செலுத்தினார். இப்படியாக ரூ 1 கோடி சேர்ந்ததும் சோழிங்கநல்லூரில் நல்ல மெயினான இடத்தில் மூன்று அடுக்கு மாடிகளை கொண்ட ஒரு வீட்டை வாங்கியுள்ளார். இது குறித்து ஈஸ்வரியின் கணவர் கேட்ட போதுகூட இந்த வீடு ஐஸ்வர்யாவின் வீடுதான். நான் அவர் பினாமி, அதனால் என்னுடைய பெயரில் வாங்கினார் என பூச்சுற்றியுள்ளார்.

சோழிங்கநல்லூர் வீடு

சோழிங்கநல்லூர் வீடு

இந்த நிலையில் சோழிங்கநல்லூரில் வீடு வாங்கியது குறித்து பிஹைண்டவுட்ஸ் சேனல் எடுத்த வீடியோ தொகுப்பில் கூறியிருப்பதாவது: கீழ் வீடு இரு படுக்கை அறை, ஹால், சமையலறையை கொண்டது, இந்த வீட்டின் வாடகை ரூ 14 ஆயிரம் ஆகும். அது போல் மேலே உள்ள வீடு 3 படுக்கை அறைகள், சமையலறை, ஹால் கொண்டது. இதற்கு வாடகை பணம் ரூ 16 ஆயிரமாம். இந்த வீட்டில் தண்ணீர் வசதி கிடையாது. தண்ணீருக்காக இரு வீட்டாரும் பகிர்ந்து பணம் கொடுத்து லாரி தண்ணீரை வாங்கி சம்ப்பில் ஊற்றி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 சப் மீட்டர்

சப் மீட்டர்

இருவருக்கும் சப் மீட்டர் இருப்பதால் கரென்ட் பில்லை அவரவர் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த வீட்டை ஒரு ரியல் எஸ்டேட் ஆப்பின் மூலம் கொடுத்த விளம்பரத்தில் உள்ள போன் எண்ணை வாடகைதாரர்கள் அணுகினர். அப்போது ஈஸ்வரியின் மகள்தான் இவர்களிடம் வாடகை, அட்வான்ஸ் உள்ளிட்ட விஷயங்களை பேசியுள்ளார். ஒரு வீட்டிற்கு ரூ 1 லட்சம் என இரு போர்ஷன்களுக்கும் ரூ 2 லட்சம் அட்வான்ஸ் வாங்கியுள்ளார். அதில் அட்வான்ஸுலும் குறைக்கவில்லையாம். வாடகையிலாவசு ரூ 1000 குறைக்குமாறு கேட்டும் ஈஸ்வரி மனம் இறங்கவில்லையாம். வாடகையை மாதந்தோறும் ஈஸ்வரியின் மூத்த மகளின் ஜிபே செயலி மூலம் செலுத்தி விடுவார்களாம். ஈஸ்வரியை ஒரு முறை மட்டுமே கீழ் வீட்டில் இருக்கும் வாடகைதாரர் பார்த்துள்ளாராம். மற்றபடி அந்த வீட்டிற்கு அதிகமாக வரமாட்டாராம். ஈஸ்வரியின் தில்லாலங்கடி வேலைகளை டிவி மூலம் அறிந்து இவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உண்ட வீட்டுக்கு இப்படி துரோகம் செய்வது சரியில்லை என்றும் கூறியுள்ளனர். ஐஸ்வர்யா ஈஸ்வரிக்கு கொடுக்கும் சம்பளம் ரூ 30 ஆயிரம், காய்கறி கடை, மளிகைக் கடை மூலம் ரூ 50 ஆயிரம் லாபம், வீட்டை வாடகைக்கு விட்டதன் மூலம் ரூ 30 ஆயிரம் லாபம் என மாதந்தோறும் ரூ 1.10 லட்சத்தை பார்த்து வந்துள்ளார் கில்லாடி ஈஸ்வரி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+