தமிழகத்தில் இன்று பரிசோதனை அதிகம், குணம் அடைந்தவர்களும் மிக அதிகம்.. விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 41,325 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 4244 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 10ல் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,.

தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 15,42.234 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 1,38,470 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது இதுவரை தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் சுமார் 9 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பலி எண்ணிக்கை குறைவு

பலி எண்ணிக்கை குறைவு

இந்தியாவிலேய தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது. விரைவான பரிசோதனையால் பலர் உடனே கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்படுகிறார்கள். இதனால் உயிரிழப்பு விகிதமும் தமிழகத்தில் மிக குறைவாகவே உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் மிகவும் குறைவு ஆகும்.

தமிழகத்தில் பரிசோதனை

தமிழகத்தில் பரிசோதனை

தமிகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்ற விவரத்தை இதுவரை இரண்டு முறை மட்டுமே சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 52 தனியார் பரிசோதனை மையங்கள் மற்றும் 53 அரசு பரிசோதனை மையங்கள் உள்பட 105 பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன.

3617 பேர் டிஸ்சார்ஜ்

3617 பேர் டிஸ்சார்ஜ்

பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதேநேரம் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3617 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 89, 532 பேர் குணம் அடைந்துள்ளனர்.

குணம் அடைந்தவர்கள் விவரம்

குணம் அடைந்தவர்கள் விவரம்

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 1668 பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். இதனால் சென்னையில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 58615 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் இன்று ஒரே நாளில் 787 பேரும், சேலத்தில் 169 பேரும், செங்கல்பட்டில் 170 பேரும், திருவள்ளூரில் 140 பேரும், விருதுநகரில் 92 பேரும், தேனியில் 76 பேரும், திருவண்ணாமலையில் 77 பேரும் இன்று ஒரே நாளில் குணம் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரத்தில் 46 பேர்

ராமநாதபுரத்தில் 46 பேர்

ராமநாதபுரத்தில் 46 பேரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 38 பேரும், கள்ளக்குறிச்சியில் 41 பேரும், காஞ்சிபுரத்தில் 29 பேரும், ராணிப்பேட்டையில் 32 பேரும் இன்று குணம் அடைந்துள்ளனர். தென்காசியில் 26 பேரும், நீலகிரியில் 24 பேரும், விழுப்புரத்தில் 33 பேரும், விருதுநகரில் 92 பேரும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர், தூத்துக்குடியில் 31 பேரும், திருநெல்வேலியில் 32 பேரும் குணம் அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+