3 நாட்கள் கழித்து 500-ஐ தாண்டிய தமிழக கொரோனா பாதிப்பு.. என்ன காரணம்?
சென்னை: தமிழகத்தில் டெஸ்டிங் எண்ணிக்கை கூடியதால் 3 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 600-ஐ தாண்டியது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த மே 1 ஆம் தேதி 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மே 2-ஆம் தேதி 231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மே 3-ஆம் தேதி 266 பேருக்கும் பாதிப்பு இருந்தது.
இதையடுத்து கடந்த மே 4 ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500ஐ தாண்டியது. மே 11-ஆம் தேதி மிகவும் உச்சபட்சமாக 798 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கொரோனா
இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி, அதாவது 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500-க்கும் குறைவாகவே இருந்தது. அன்றைய தினம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 447 ஆக இருந்தது. அதுபோல் 15-ஆம் தேதி 434 பேருக்கும், 16-ஆம் தேதி 477 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது.

நிபுணர்கள்
சிலர் கொரோனா பாதிப்பு குறைந்திருக்கலாம் என தெரிவித்தனர். கடந்த 3 தினங்களாக 500-க்கும் குறைவாக கொரோனா எண்ணிக்கை இருந்ததற்கு காரணம் டெஸ்டிங்கை 30 சதவீதம் குறைத்துவிட்டதுதான் என நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். முன்னர் ஒரு நாளைக்கு 4000, 5000 ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு நிலையில் கடந்த சில தினங்களாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வந்தது.

சோதனா
எனவே தற்போது கொரோனா பாதிப்பு 500-ஐ தாண்டியதை வைத்து பார்க்கும் போது பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்திருத்ததே என்பது அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு மூலம் தெரிகிறது. அதாவது இன்று 13,081 பேரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதுபோல் 12,445 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ரத்த மாதிரிகள்
இந்த 3 தினங்களில் 10 ஆயிரத்துக்கும் குறைவாகவே ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. எனவே 17-ஆம் தேதியான இன்று 639 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கு ரத்த மாதிரிகளின் சோதனை அதிகரிக்கப்பட்டதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications