இனி ஆசிரியர் ஆவது ரொம் ஈஸி.. TET தேர்வு மதிப்பெண்ணில் அதிரடி மாற்றம்! குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு
சென்னை: டெட் எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் தற்போது குறைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வில், சுலபமாக தேர்ச்சிப்பெற முடியும்.
Teacher Eligibility Test / ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியராக வேலை பெற விரும்புவோர் எழுத வேண்டிய அரசு தேர்வு. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் அளவீடு தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த மதிப்பெண்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் வரையறுக்கப்பட்டிருக்கிறது.
அதாவது மொத்த மதிப்பெண் 150. இதில், முன்னேறிய சமூகத்தினர், பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC), சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் என, ஒவ்வொரு சமூகத்தினருக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் அளவீடு இருக்கிறது. அந்த அளவுக்கு மதிப்பெண் எடுத்தால்தான் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.
அதன்படி பொதுப்பிரிவினர் 90 (60%) மார்க் எடுக்க வேண்டும். முன்னரும் இதே அளவுதான் இருந்தது. மற்ற பிரிவினரை பொறுத்தவரை, பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC), சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்கள் மொத்த மதிப்பெண்ணில் குறைந்தது 75 மர்க் (50%) எடுக்க வேண்டும். முன்பு 82.5 மார்க் எடுக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது.
அதேபோல, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களை பொறுத்தவரை, 60 மதிப்பெண் (40%) எடுத்தால் போதும். அவர் தேர்ச்சி பெற்றவராக கருதப்படுவார். இதற்கு முன்னர் 67.5 மார்க் எடுக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சுமார் 15,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. அதேபோல கடந்த 2013-2022 வரை டெட் தேர்வெழுதி சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் அரசு பணிக்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications