உச்ச நீதிமன்றம் விதித்த கெடு.. ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி வருமா... அன்பில் மகேஷ் திட்டம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றால் தான் பணியில் நீடிக்க முடியும் என்று என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு, ஆசிரியர்களுக்கு ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வை அடுத்த ஆண்டு (2026) ஜனவரி, ஜூலை, டிசம்பர் மாதங்களில் நடத்த உள்ளது. இந்நிலையில் ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு தொடர்பாக ஆசிரியர் சங்கத்தினருடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். அப்போது ஆசிரியர்கள் தகுதி மதிப்பெண்ணை குறைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச் சட்டப்படி, 8 ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சட்டம் 2011 -12ஆம் ஆண்டில் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து 2012-ம் ஆண்டு முதல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

TET TRB teachers demand reduction in qualifying marks What is Anbil Mahesh s plan

உச்ச நீதிமன்றம் கெடு

ஆனால் 2011ம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு போட்டிதேர்வுகளின் மூலம் வென்று தேர்வான, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு ஓய்வு

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போட்டித் தேர்வில் வென்ற பல லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி பெறாமல் போனால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். அதாவது கட்டாய ஓய்வளிக்கப்படுவார்கள். நாடு முழுவதும் பல லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வை எழுத வேண்டும். இதுதவிர இதேபோல் தனியார் பள்ளிகளில் பணியாற்றுவோரில் சுமார் 2 லட்சம் பேர் தகுதி தேர்வில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெற்றி பெறாவிட்டால் ஆசிரியராக தொடர முடியாது.

3 முறை தேர்வு

இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வை ஆண்டுக்கு 3 முறை நடத்த திட்டமிட்ட தமிழக அரசு, அதுதொடர்பான அறிவிப்பையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, ஜனவரி, ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் ஜனவரி மாதத்துக்கான தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என ஆசிரியர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், அதுதொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நவம்பர்19ம் தேதி வெளியிட்டது.

அதில் சிறப்பு தகுதித்தேர்வு தாள்-1 தேர்வு அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 24-ந் தேதியும், தாள்-2 தேர்வு 25-ந் தேதியும் நடைபெறும் என்றும், இதற்கு இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பு நவம்பர் 19ம் தேதி அன்று பிற்பகலில் எந்த காரணமும் தெரிவிக்காமல் உடனடியாக வாபஸ் பெறப்பட்டது. முறையான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அன்பில் மகேஷ் ஆலோசனை

இதில் ஜனவரி மாத தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு பின்னர் வாபஸ் பெற்ற பின்னர்,, ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு தொடர்பாக அதிகாரிகளுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக நேற்று சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அன்பில் மகேஷ் உடன் ஆசிரியர்கள் சந்திப்பு

இதில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் உள்ளிட்ட 55-க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆசிரியர் சங்கங்களும் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தார்கள்.

மதிப்பெண்ணை குறைக்குமாறு கோரிக்கை

அந்த வகையில் தகுதி மதிப்பெண்ணை 55 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக மாற்றி உத்தரவை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தெரிவித்தனர். இதற்கிடையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு அடுத்த மாதம் (டிசம்பர்) மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக' ஆலோசனை கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே ஆசிரியர்களாக பணிபுரியும் அனைவரும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனையும் நடத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+