Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நர்ஸ் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது - குமரி அனந்தனுக்கு தகைசால் விருது வழங்கினார் தமிழக முதல்வர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகஸ்ட் 15 இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டையில் தேசிய கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்.. இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கி கவுரவித்தார் முதல்வர். அந்தவகையில், நர்ஸ் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருதும், மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் விருதும் வழங்கினார் தமிழக முதல்வர்.

இன்று 78வது சுதந்திர தினம் நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி உரையாற்றினார்

independence day 2024 kumari anandan kalpana chawla award stalin

கோட்டை கொத்தளம்: கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தினார். இதையடுத்து, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

அந்தவகையில், தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த "தகைசால் தமிழர்" என்ற பெயரிலான விருது, ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது.. இந்த ஆண்டுக்கான விருதுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியுமான மூத்த தலைவர் குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலினின் கையால், இந்த விருதினை பெற்றார் குமரி அனந்தன்.

கல்பனா சாவ்லா: அதேபோல, கல்பனா சாவ்லா விருது, செவிலியர் சபீனாவுக்கு வழங்கப்பட்டது.. வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தமிழகத்தின் கூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனா, ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தது குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. செவிலியர் சபீனாவின் இந்த வீர செயலுக்காக அவருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதையடுத்து, தமிழக செவிலியர் சபீனாவுக்கு, வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டது. செவிலியர் சபீனாவுக்கு, விருதினை முதல்வர் ஸ்டாலின், இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கினார.. உள்ளார்... வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலாக செயல்பட்டு சிகிச்சை அளித்தமைக்காக, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டுள்ளது

விருதுகள்: அதேபோல அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவோருக்கு அப்துல் கலாம் விருது, உள்ளிட்ட விருதுகளும் விழாவில் வழங்கப்பட்டுள்ளன.. சுதந்திர தினத்தை முன்னிட்டு, நல்லாளுமை விருதுகளை, முதல்வரின் முகவரித் துறை அலுவலர், 4 ஐஏஎஸ் அதிகாரிகள், ஒரு மருத்துவர் ஆகியோருக்கு பல்வேறு பிரிவுகளில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

நல்லாளுமை விருது: முதல்வரின் முகவரித்துறையின், தலைமை தொழில்நுட்ப அலுவலர் த.வனிதா, உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கையை விகிதத்தை கணிசமாக உயர்த்தியதற்காக விருதுநகர் ஆட்சியர் வீ.ஜெயசீலன், பொது நூலககங்கள் துறை இயக்குனர் க.இளம்பகவத் ஆகியோருக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டுள்ளது

உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் ந.கோபால கிருஷ்ணன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குனர் ச.திவ்யதர்சினிக்கும், நான் முதல்வன் திட்டம் வாயிலாக இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முறைகளில் புதுமையை புகுத்தியதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குனர் ஜெ.இன்னசன்ட் திவ்யாவுக்கும் நல்லாளுமை விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். விருதாளர்களுக்கு சான்றிதழுடன், ரூ.2 லட்சம் பரிசும் வழங்கப்பட்டுள்ளது

ரொக்கப்பரிசு: அதேபோல, சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பதக்கங்கள் வழங்கவுள்ளார்... 2024-ம் ஆண்டிற்கான சிறப்பு பதக்கங்கள் 15 காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளன. விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து முதல்வர் உரையாற்றியய போது, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் இதுதான்:

"திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 65,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. காலை உணவுத் திட்டத்தால் நாள்தோறும் 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழகம் உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது என்பதை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளது.

பெண்களுக்கான விடியல் பயணம் திட்டம், உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்டவை பெண்களின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 75,000 இடங்கள்: மோடி
தொடர்ந்து, முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

1. குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் முதல்வர் மருந்தகம் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்படும்.

2. முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் காக்க, முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் படை வீரர்கள் வங்கிகளில் ரூ ஒரு கோடி வரை கடன் பெற ஏற்பாடு செய்து தரப்படும்.

3. தியாகிகள் ஓய்வூதியம் ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக அதிகரிப்பு.

4. வயநாடு சம்பவத்தின் எதிரொலியாக, நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்டர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+