Pongalo Pongal: புது பானையில் பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? தவிர்க்க வேண்டிய டைம் இதுதான்!
சென்னை: இன்று தை 1ஆம் தேதி பொங்கல் திருவிழா! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் பொங்கல் பண்டிகையை எப்படி கொண்டாட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
தைப்பொங்கல், அறுவடைத் திருநாளாகும். விவசாயத்தையும், கால்நடைகளையும் போற்றும் இந்தப் பண்டிகை, சூரியனுக்கு நன்றி செலுத்தும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது.

சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறும் நிகழ்வே தை மாதப் பிறப்பு எனப்படுகிறது. மற்ற மாநிலத்தவர்கள் இதை 'மகர சங்கராந்தி' என்ற பெயரில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகக் கொண்டாடுகின்றனர்.
இந்த ஆண்டு தைப்பொங்கல் பண்டிகை இன்று வியாழக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்தப் பொங்கல் திருநாளுக்கு பொதுவாக பச்சரிசி பொங்கல், சர்க்கரை பொங்கல், எல்லா காய்கறிகளும் போட்டு குழம்பு, வெந்தயக் கீரை கூட்டு என அவரவர் பழக்க வழக்கத்தின் பேரில் செய்வர்.
சிலர் வெண்கல பாத்திரத்தில் பொங்கல் வைப்பர். பலர் புது பானையில் பொங்கல் வைப்பார்கள். அந்த வகையில் பொங்கல் வைக்க உகந்த நேரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சூரிய பொங்கல் வைக்கும் வழக்கம் கொண்டவர்கள், காலை 6 மணிக்கு முன் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்குப் படைத்து வழிபட வேண்டும். இது சூரிய பொங்கல் எனப்படும், இதற்கு நல்ல நேரம் பார்க்கத் தேவையில்லை.
காலை 6 மணிக்கு மேல் பொங்கல் வைக்க விரும்புவோர், பின்வரும் நல்ல நேரங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். காலை 7:45 - 8:45 மணி வரையிலும், 10:35 மணி முதல் பகல் 1:00 மணி வரையிலும் பொங்கல் வைக்க உகந்த நேரமாகும். குறிப்பாக, காலை 10:30 - 11:00 மணி மற்றும் பிற்பகல் 1:00 - 1:30 மணி வரையிலும் நல்ல நேரமாகக் கருதப்படுகிறது. கெளரி நல்ல நேரம் மாலை 6:30 - 7:30 மணி வரை.
அதேபோல், பொங்கல் வைக்கத் தவிர்க்க வேண்டிய எமகண்ட நேரம் காலை 6:00 - 7:30 மணி வரை. ராகு காலம் பிற்பகல் 1:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை நீடிக்கும். குளிகை நேரத்திலும் பொங்கல் வைக்கலாம் என்கிறார்கள். மேலும் குரு ஓரை, சுக்கி ஓரைகளிலும் பொங்கல் வைக்க உகந்த நேரம் என்கிறார்கள். வியாழக்கிழமையில் பொங்கல் வந்துள்ளது பல்வேறு நன்மைகள் செய்யும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications