பொங்கல் கொண்டாட சொந்த ஊர் போறீங்களா?..தென் மாவட்ட மக்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல பயணிகளின் வசதிக்காக தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கும் நாகர்கோவிலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தைப்பொங்கல் திருநாள் ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகைத் தொடங்கி ஜனவரி 17காணும் பொங்கல் வரை கொண்டாடப்படும். 3 நாட்கள் விடுமுறையை சொந்த ஊரில் உறவினர்களுடன் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும் ரயிலில் செல்லவே பெரும்பாலானோர் விரும்புவார்கள். ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்டதால் ஆம்னி பேருந்துகளில் கட்டணங்கள் அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லவும் சொந்த ஊரில் இருந்து சென்னை வருவதற்கும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க உள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில் (06041) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13 அன்று இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06042) ஜனவரி 16 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 05.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும் இந்த ரயிலில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12 அன்று இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் (06022) திருநெல்வேலியிலிருந்து ஜனவரி 13 அன்று மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
மேலும் இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் சிறப்பு கட்டணம் ரயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06057) ஜனவரி 16 அன்று தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06058) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17 அன்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும் இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதி உள்ள பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06044) கொச்சுவேலியில் இருந்து ஜனவரி 17 அன்று காலை 11.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு கட்டண ரயில் (06043) தாம்பரத்திலிருந்து ஜனவரி 18 அன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.
இந்த ரயில்கள் திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், துறைமுகம் சந்திப்பு, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் 16 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு தூண்கள் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.எர்ணாக்குளம் - சென்னை சென்டரல் சிறப்பு கட்டண ரயில் (06046) ஜனவரி 12 அன்று எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்டரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் சென்னை சென்டரல் - எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரயில் (06045) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 13 அன்று மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு அன்று நள்ளிரவு 3.10 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும். இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications