Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று தைப்பூசம்: பழனி, திருச்செந்தூர், வடலூரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்- சிறப்பு ரயில் சேவை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் முருகன் ஆலயங்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வடலூர் வள்ளலார் ஞானசபையில் ஏழு திரைகளை நீக்கி காண்பிக்கப்படும் ஜோதி தரிசன வழிபாட்டுக்காகவும் பெருந்திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர். தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

முருகனின் பக்தர்கள் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர விழாக்களின் போது பாதயாத்திரையாக நடந்து காவடி சுமந்து முருகனை வழிபடுவது வழக்கம். தைப்பூச விழா இன்று நடைபெறுவதால் முருகனின் அறுபடை வீடுகள் அனைத்திலும் முருக பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்துள்ளனர்.

Thaipusam


பழனியில் பாதயாத்திரையாக காவடி சுமந்து வரும் பக்தர்கள் யானைப்பாதை வழியாக குழு குழுவாக மலையேற அனுமதிக்கப்படுகின்றனர்; பின்னர் படிக்கட்டுகள் வழியாக இறங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பக்தர்களுக்காக படிக்கட்டுகள் பாதையில் அன்னதானங்களும் பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன. பழனியில் தரிசன டிக்கெட்டுகள் அனைத்தும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

பழனி மலை அடிவாரத்தில் தற்காலிக வாகன நிறுத்தங்கள், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள், மருத்துவ முகாம்கள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 3,000-க்கும் அதிகமான போலீசார் பழனியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்ப்ட்டுள்ளன. பழனி மலை அடிவார கிரிவலப் பாதையில் பக்தர்கள் காவடி சுமந்து ஆட்டம் பாட்டத்துடன் மலையேறுவர் என்பதால் அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நெரிசல் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல திருச்செந்தூரிலும் கடல் அலைபோல திரண்டு வந்துள்ள பக்தர்கள் எந்த சிரமும் இல்லாமல் தரிசனம் செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முருகனின் அறுபடை வீடுகள் அனைத்திலும் இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


வடலூர் வள்ளலார் ஞானசபையில் இன்று 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த வண்ணத்திரைகளை நீக்கி நடைபெறும் ஜோதி தரிசனத்தை வழிபடுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

மேலும் மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதேபோல விருத்தாசலத்தில் இருந்து கடலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+