அக்ஷரா கண்ணு.. சாமி சத்தியமா.. என் கிட்னியை உன் அம்மாவுக்கு தரேன்.. பிக்பாஸ் தாமரைச் செல்வி
சென்னை: சாமி சத்தியமா என் கிட்னியை அக்ஷராவின் அம்மாவிற்கு கொடுப்பேன் என நாடகக் கலைஞர் தாமரைச் செல்வி உறுதியளித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 5 மிகுந்த எதிர்பார்ப்போடு தொடங்கியது. இந்த நிலையில் 18 போட்டியாளர்களில் நமிதா மாரிமுத்து வெளியேறிவிட்ட நிலையில் மீதம் 17 பேர் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.
இந்த சீசனில் அவ்வப்போது மோதல் போக்கு ஏற்படுகிறது. பின்னர் சமாதானமாகிவிடுகிறார்கள். ராஜு- அபிஷேக், நமிதா மாரிமுத்து- தாமரைச் செல்வி, தாமரைச் செல்வி- அபிஷேக், சிபி- நிரூப் ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டது.

அக்ஷரா ரெட்டி
இந்த நிலையில் நேற்று முதல் எலிமினேஷனுக்காக நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. இதில் அபினய், அபிஷேக், அக்ஷரா ரெட்டி, சின்னப்பொண்ணு, இசை வாணி, சிபி, இமான் அண்ணாச்சி, பிரியங்கா, நிரூப், சுருதி, வருண் ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளதாக பிக்பாஸ் அறிவித்தார்.

பிக்பாஸ் ஹவுஸ்
இதையடுத்து இந்த வார பிக்பாஸ் ஹவுஸின் தலைவராக தாமரைச் செல்வி தேர்வு செய்யப்பட்டார். இந்த நாமினேஷன் பிராசஸுக்கு முன்பு தலைவர் பதவியை நான்தான் உனக்கு விட்டுக் கொடுத்தேன் என சின்னப்பொண்ணு கூற, அதற்கு தாமரை, அப்படியெல்லாம் எதுவும் வேண்டாம் அக்கா, நான் எதாவது தப்பு செய்திருந்தா, என்ன மன்னிச்சிடுங்க, நான் தெம்மாங்கு பாட்டுகள் மூலம் பிரபலமானவர் என கூறினார்.
Recommended Video

சாமி சத்தியம்
இப்படியாக இவர்கள் இருவருக்கும் இடையே உரையாடல் நடைபெறுகிறது. அப்போது அங்கிருந்த அக்ஷராவை பார்த்து தாமரைச் செல்வி, கண்ணு நீ பேசாம இருந்தால் கஷ்டமா இருந்தது. கவலைப்படாதே என் உடம்புக்கு எது வந்தாலும் வெளியே வந்து சாமி சத்தியமா என்னோட கிட்னியை உனது அம்மாவுக்கு கொடுக்கிறேன். இது என் குழந்தைகள் மீது ஆணை என்றார்.

எப்படி சாத்தியம்
இதை பிக்பாஸ் போட்டியாளர்கள் பாராட்டி வருகிறார்கள். ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியம் என தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியில் தாமரைச் செல்வி மிகவும் இன்னோசென்ட்டாக இருந்து வருகிறார். வெகுளித்தனமாக நிறைய பேசி சில போட்டியாளர்களின் அதிருப்திக்குள்ளாகிறார். இவர் தலைவர் என்பதால் அடுத்த நாமினேஷனில் தப்பினார். இனி பொறுத்திருந்து பார்ப்போம்.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications