அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தமிழிசை மூக்கை நுழைப்பது தவறானது- தம்பிதுரை
Recommended Video

சென்னை: அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை மூக்கை நுழைப்பது தவறானது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவும் பாஜகவும் எந்தளவுக்கு இணக்கமாக இருந்ததோ அந்தளவுக்கு தற்போது எலியும் பூனையுமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

அமைக்காது
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்த போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காது என கூறியிருந்தார்.

விளக்கம்
இதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்திரராஜன், தம்பிதுரையின் கருத்து அதிமுகவின் கருத்து அல்ல என்று கூறினார். இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜராகி விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

வாய்மூடி மௌனி
அவர் கூறுகையில் அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது. பாஜக தலைவர்கள் தமிழக அரசை விமர்சிக்கும் போது வாய்மூடி மௌனியாக இருக்க முடியாது.

சும்மா இருக்க முடியாது
எங்கள் கட்சி குறித்து கருத்து சொல்ல தமிழிசைக்கு யார் உரிமை கொடுத்தது? யார் குறை சொன்னாலும் என்னால் சும்மா இருக்க முடியாது என்றார் தம்பிதுரை.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications