முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை! தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுக! ஓயாத அன்சாரி!
சென்னை: வரும் 31ஆம் தேதி நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது;
20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். முதல்வரின் பரிந்துரை குறித்து கவர்னர் இதில் எந்த முடிவும் எடுக்க மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இதற்கு வலிமையான ஒரு மாற்று என்பது அரசியல் சட்டம் சட்ட உறுப்பு எண் 161-வது அம்சமாகும்.

பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலைக்கு, அமைச்சரவையில் அரசியல் சட்ட உறுப்பு எண் 161-ன் படி அன்றைய அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியது போல ஒரு தீர்மானத்தை முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்திலும் நிறைவேற்றுங்கள் என்றும், இது உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெல்ல உதவும் என்றும் வலியுறுத்தி வருகிறோம்.
இந்நிலையில் எதிர்வரும் 31.10.2023 அன்று தமிழக அமைச்சரவை கூடுவதாக அறிவிப்பு வந்துள்ளது. அதில் தமிழ்நாட்டு நலனுக்காக பல்வேறு நல்ல முடிவுகள் எடுத்திட வாழ்த்துகிறோம். இத்தருணத்தில் 20 ஆண்டுகளை கடந்த சிறைவாசிகள் முன் விடுதலை விவகாரத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டுகிறோம்.
சாதி, மத, வழக்கு பேதமின்றி, நாங்கள் சுட்டிக்காட்டும் 36 பேர் உட்பட, 20 ஆண்டுகளை கடந்த அனைவரையும் அரசியல் சட்ட உறுப்பு எண் 161-ன் கீழ் முன் விடுதலை செய்ய பரிந்துரைத்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உரிய முயற்சி எடுக்க வேண்டும் என அன்புடன் வலியுறுத்துகிறோம்.
இதுவே வலிமை மிக்கது என்பதால் மாண்புமிகு முதல்வர் அவர்கள் இக்கோரிக்கையை மனிதாபிமானத்துடன் பரிசீலிக்க வேண்டுகிறோம். இன்று NEET தேர்வுக்கு தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு கேட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மூ அவர்களை சந்தித்த தமிழக முதல்வர் அவர்கள், உணர்வுப்பூர்வமாக இவ்விவகாரத்தில் துரிதமாக முடிவெடுக்குமாறு கேட்டுக்கொண்டதை பார்த்தோம்.
அவரது உருக்கமான வேண்டுகோள் மனதை நெகிழச்செய்தது. அதே வார்த்தைகளில் மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்கள் எமது இக்கோரிக்கையையும் பரீசீலிக்க வேண்டும் என கோருகிறோம். மனிதாபிமானத்துடன்- திறந்த மனதுடன் எங்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என மீண்டும், மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications