சூர்யா அப்படி என்ன தவறாக பேசிவிட்டார்...? கேள்வி எழுப்பும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ..!
சென்னை: நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா அப்படி என்ன தவறாக பேசிவிட்டார் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் சூர்யாவின் கருத்தை ஆரோக்யமான முறையில் எதிர்கொள்வதே சிறந்த ஜனநாயகம் என ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கடந்த 12.09.2020 அன்று ஒரே நாளில் 3 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு பதட்டம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தமிழகமே கவலை கொண்டது. அந்த உணர்வை பிரதிபலிக்கும் வகையில் நடிகர் சூர்யா அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு அமோக வரவேற்பும், ஆதரவும் கிடைத்துள்ளது என்பதே யதார்த்த உண்மையாகும்.
இந்திலையில் அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என முன்னாள் நீதிபதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். அப்படி என்ன சூர்யா தவறாக பேசி விட்டார்? என்ற கேள்வி பரவலாக எதிரொலிக்கிறது.
ஜனநாயக வழியில் மக்களின் உணர்வுகளை எதிரொலித்த நடிகர் சூர்யா மீது நடவடிக்கை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதோடு, இது கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயலாகவே கருதப்படும். அவரின் கருத்தை ஆரோக்கியமான முறையில் எதிர்கொள்வதே சிறந்த ஜனநாயக முறையாக இருக்கும். எனவே அவர் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications