ஐநாவில் எத்தனை விதிகள் இருந்து என்ன பயன்? 1 விதி கூட பாலஸ்தீனியர்கள் தலைவிதியை மாற்றவில்லை! -அன்சாரி
சென்னை: ஐ.நா.வில் எத்தனையோ விதிகள் இருந்தும் ஒரு விதி கூட பாலஸ்தீனியர்களின் தலைவிதிக்கு தீர்வு காணவில்லையே என்ற ஆதங்கத்தை உருக்கமுடன் கவிதையாக எழுதியுள்ளார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக தமிமுன் அன்சாரி எழுதிய உருக்கமான கவிதை வருமாறு;

இஸ்ரேலிய கழுகுகளின்
சியோனிஸ தாக்குதல்களில்;
கான்க்ரீட் குப்பைமேடுகளாய்;
காட்சியளிக்கிறது காஸா!
இங்கு ஏவுகணைகளால்
இடிந்து விழுவதற்காகவே
கட்டப்படுகின்றன
கட்டிடங்கள்!
போரில் சாவதற்காகவே,
வாழ்கிறார்கள் மனிதர்கள்!
**********
வாழ்வில் போராட்டங்கள் இருக்கலாம்:
போராட்டங்களே வாழ்க்கையாகலாமா?
வெடிவயல்களில் வாழ்ந்தே
பழக்கப்பட்ட பலஸ்தீனியர்களுக்கு,
இந்தப் போரும்
வாழ்க்கையாகிவிட்டது!
***********
இடிபாடுகளில் கதறும் மனித ஓலங்கள்
மனசாட்சியை உலுக்குகின்றன;
ஆனால்,
உலகின் பெரும்பகுதி
ஊமையாகவே இருக்கிறது!
*********
யாருக்கு யார்
ஆறுதல் கூறுவது?
என தெரியாமல்
கலங்கி நிற்கும் அபலைகளுக்கு;
கைக்குட்டைகளை கொடுக்கக் கூட
பலருக்கு மனமில்லை!
*********
தாய் இறந்தது கூட தெரியாமல்
மார்பில் பால் அருந்த துடிக்கும்
பாலகர்கள்:
அண்ணனின்
கடைசி நேர உயிர் வலிகளை
புரிய முடியாமல் துடிக்கும் தம்பிகள்:
மருத்துவமனையில் பெற்றோரை இழந்த குழந்தைகள்:
என
முடிவில்லா துயரில்
மூழ்கி தவிக்கிறது காஸா...
********
உதவிக்கு
அண்டை அயலார்
ஓடோடி வருவார்கள் என காத்திருந்தவர்களுக்கு;
கிடைத்தது
காகிதத்தில் எழுதப்பட்ட
கண்டன தீர்மானங்கள் மட்டுமே...
கச்சா எண்ணெயைப் பற்றி
கவலைப்படுபவர்கள்;
காஸாவின் கண்ணீர் ஓலங்களை
வேடிக்கைப் பார்ப்பதில் ஆச்சர்யமில்லைதான்...
********
வெடி மருந்து கிடங்குகளை
வழிநடத்தும் வல்லரசுகளுக்கு;
இப்போர் ஒரு வணிகம் !
இனி,
கள சண்டைகளும்,
ஆயுத சந்தைகளும்
பரபரப்பாகும்...
24 மணி நேரமும் அவர்களது
ஆயுத தொழிற்சாலைகள் இயங்கும்!
ஐ.நா.வில் எத்தனையோ விதிகள்
உண்டு!
ஒரு விதி கூட
பலஸ்தீனியர்களின் தலைவிதிக்கு
தீர்வு காணவில்லை..!
********
பாலை புழுதியில்
ரத்தச் சகதியில்
உயிருக்கு போராடும்
அம்மக்களுக்கு உதவாத
ஐக்கிய நாட்டு சபை இனி எதற்கு ?
*****
வெப்ப புயலில்
கருகாமல்
களமாடும்
பலஸ்தீனியர்களே...
பைத்துல் முகத்தஸின் புதல்வர்களே...
காத்திருங்கள்... காத்திருங்கள்...
அபாபீல்களும், அய்யூபிகளும் வருவார்கள்
நபிமார்கள் நடமாடிய மண்ணில் ரோஜாப் பூக்கள் மலரும்...
ரத்தத் தடாகங்களின் வழியே
சமாதானத்தின் நறுமணம் கமழும்..!
இவ்வாறு அவர் தனது ஆதங்கத்தையும், வேதனையையும் கவிதை நடையில் எழுதியுள்ளார்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications