ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்ன வாழ்வாதாரம் தருவீர்கள்... பிரதமருக்கு வேல்முருகன் கேள்வி
சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்ன வாழ்வாதாரம் தருவீர்கள் என்றும் இதுவரை அதைப்பற்றி ஏன் ஒரு முறை கூட தொலைக்காட்சியில் பேசவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.
மேலும், தற்போது உள்ள சூழலில் பி.எம். கேர் நிதியிலிருந்து ஒரு பைசா கூட பிரதமர் மோடி எடுத்து தர மறுப்பது ஏன் என அவர் வினவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அறிவுரைகள் போதாது
கொரோனாவுக்காக நேற்றுடன் நாலு தடவை தொலைக்காட்சியில் உரையாற்றிவிட்டார் மோடி. நாலு தடவையுமே அவர் கூறியவை ஆலோசனைகள், கட்டளைகள், எச்சரிக்கைகள்தான். மருத்துவ வசதிகள், கருவிகள், நிதிகள், மக்களுக்கான வாழ்வாதாரங்கள் பற்றி மூச்சே விடவில்லை. கூட்டாட்சி நாடான இந்தியாவில் மத்தியில் மாநிலங்களின் பிரதிநிதித்துவ நிர்வாக அமைப்புதான் இருக்க வேண்டுமே ஒழிய, ஒன்றிய அரசு என்ற ஒன்று இருப்பதே மகா தெண்டம்.

ஜி எஸ் டி
மாநில மக்கள் வருந்தி உழைத்து சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் ஜிஎஸ்டி என்ற பேரில் கபளீகரம் செய்கிறது ஒன்றிய அரசு. அதில் பாதிக்கு மேல் 55 விழுக்காட்டை எடுத்துக்கொண்டு 45 விழுக்காட்டைத்தான் மாநிலங்களுக்கு வழங்குகிறது. அந்த 45 விழுக்காடும் கூட, முழுசாக, முறையாகத் தரப்படுவதில்லை. இந்தக் கொரோனா சமயத்தில் தமிழ்நாடு அதைப் பல முறை கேட்டுப்பார்த்தும் தந்தபாடில்லை.

தர மறுப்பது ஏன்?
இத்தனைக்கும் ‘பிரதமர் நிவாரண நிதி' என்ற கல்லாப்பெட்டி ஏற்கனவே உள்ளது. அது தவிர, ‘பிஎம் கேர்' என்கிற புது கல்லாப்பெட்டியையும் செய்து வைத்துள்ளார் மோடி. இவைகளில் எக்கச்சக்கமாக பணம் உள்ளது. இவற்றிலிருந்து ஒரு பைசாவைக் கூட இந்தக் கொரோனா ஆபத்து நேரத்திலும் எடுத்துத் தர மறுக்கிறார்.

தானிய மூட்டைகள்
நன்கறிந்த பொருளியல் நிபுணர்களான ரகுராம் ராஜன், அபிஜித் பானர்ஜி, பிரபாத் பட்நாயக் ஆகியோர், "இத்தனை நாள் ஊரடங்கின்போதும் சரி, மேலும் அதை நீட்டித்தபோதும் சரி, நலத்திட்டங்கள் எதையுமே அறிவிக்கவில்லை. அரசிடம் பணம், உணவுப் பொருட்கள் அபரிமிதமாக இருந்தும் கூட மக்களுக்கு உதவவில்லை" என்கின்றனர். மத்திய கிட்டங்கிகளில் தேங்கிக் கிடக்கும் உணவு தானிய மூட்டைகள் எலிகளுக்கும் பெருச்சாளிகளுக்குமே தவிர மனிதர்களுக்கில்லை!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications