சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிடிவி தினகரனை ஆபாசமாக திட்டிய விவகாரம்.. அமமுகவில் இருந்து தங்கதமிழ்ச்செல்வன் நீக்கம்?

Google Oneindia Tamil News

Recommended Video

    தேனி: டிடிவி தினகரனை விமர்சித்து ஆடியோ... தங்கதமிழ் செல்வன் பேசியதாக வைரல்...

    சென்னை: தங்கதமிழ்ச்செல்வன் போனில் டிடிவி தினகரனை ஆபாசமாக திட்டி சண்டை போடும் ஒரு ஆடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில் ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியான விவகாரத்தால் அமமுகவில் இருந்து தங்கதமிழ்ச்செல்வனை நீக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஒபிஎஸ் அணியினர் அதிமுகவில் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் தனித்து செயல்பட முயன்ற போது, அவருடன் சென்ற 18 எமஎல்ஏக்களில் முக்கியமானவர் தங்கதமிழ்ச்செல்வன். இவர் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக உள்ளார்.

    தேனி மக்களவை தொகுதி தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்னர் தங்கதமிழ்ச்செல்வனை நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் மீண்டும் அதிமுகவில் சேர ஆர்வம் காட்டி வருவதாக கூறப்பட்டது. அதனை நிரூபிக்கும் விதமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அண்ணன் என்று பாராட்டிய தங்கதமிழ்ச்செல்வன், தமிழக அரசு பிளாஸ்டிக் ஒழிப்பில் சிறப்பாக செயல்படுவதாக புகழ்ந்தார்.

     நான் விஸ்வரூபம் எடுத்தால் தினகரன் அழிந்து விடுவார்.. தங்க.தமிழ்ச்செல்வனின் 'வார்னிங்' ஆடியோ நான் விஸ்வரூபம் எடுத்தால் தினகரன் அழிந்து விடுவார்.. தங்க.தமிழ்ச்செல்வனின் 'வார்னிங்' ஆடியோ

    அமைச்சர்கள் வரவேற்பு

    அமைச்சர்கள் வரவேற்பு

    அதன்பிறகு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் தங்கதமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் என தெரிவித்தனர். இந்த சூழலில் நேற்று டிடிவி தினகரனை ஆபாசமாக வசைபாடுவது போன்ற ஆடியோ வெளியாகி அமமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆடியோவில் "இந்த மாதிரி பொட்டத்தனமான அரசியல் பண்றதை நிறுத்தச்சொல்லுப்பா. உங்க அண்ணணை நிறுத்தச்சொல்லு. நான் விஸ்வரூபம் எடுத்தா, நீங்க அழிஞ்சிபோவீங்க. நான் நல்லவன். நேற்று நீங்க தேனியில கூட்டம்போட்டீங்க. நாளைக்கு நான் மதுரைல கூட்டம் போடவா? பாரு... என்ன நடக்குதுனு பாரு. இந்த பேடித்தனமான அரசியல பண்ண வேணாம்னு உங்க அண்ணன்ட சொல்லிடு. தோத்துப்போவ... என்னைக்கும் ஜெயிக்க மாட்ட" என்று கடுமையாகப் பேசுகிறார்.

    கட்சி நிர்வாகிகள் சம்மதம்

    கட்சி நிர்வாகிகள் சம்மதம்

    இதனையடுத்து நேற்று டிடிவி தினகரன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பல நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது தங்கதமிழ்ச்செல்வனை கட்சியை விட்டு நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு ஒட்டுமொத்த நிர்வாகிகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கூடிய விரைவில் தங்கதமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து நீக்கப்படுவார் என தெரிகிறது.

    தங்கதமிழ்ச்செல்வன் வகித்த பொறுப்பு

    தங்கதமிழ்ச்செல்வன் வகித்த பொறுப்பு

    இதனிடையே தங்க தமிழ்ச்செல்வன் வகித்த கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பை ஒசூரில் வேட்பாளராக போட்டியிட்ட புகழேந்தியிடம் தினகரன் ஒப்படைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஜெ. காலத்திலேயே சண்டை

    ஜெ. காலத்திலேயே சண்டை

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெலலிதா உயிருடன் இருந்தகாலத்திலேயே ஒ பன்னீர்செல்வத்துக்கும் தங்கதமிழ்ச்செல்வனுக்கும் ஆகாமல் இருந்து வந்தது. எனினும் நீர் பூத்த நெருப்பாக இருந்த இவர்களது போட்டி அரசியல், ஜெயலலிதா மறைவுக்கு பின் வெளிப்பட்டது. இப்போது அதே பன்னீர்செல்வத்துடன் தங்கதமிழ்ச்செல்வன் இணைந்து செயல்பட போவதாக சொல்லப்படுகிறது. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று தான் எல்லாருக்குமே தோன்றும்.

    English summary
    thanga tamil selvan may dismissed from ammk party over the ridiculous audio speech against ttv dinakaran
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X