திமுகவும் இல்லை, அதிமுகவுக்கும் போகல.. தங்க தமிழ்ச்செல்வன் சேரப்போற கட்சி தெரிஞ்சா அசந்துருவீங்க
Recommended Video

சென்னை: அமமுக கட்சி தலைமையுடன் உரசல் ஏற்பட்டுள்ள நிலையில், கொள்கை பரப்பு செயலாளர் தங்கத் தமிழ்ச் செல்வன், அடுத்ததாக போகப்போகும் கட்சி, திமுகவுக்கா அல்லது அதிமுகவுக்கா என்று ஒரு பக்கம் பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தால், அவரோ எதுமாதிரியும் இல்லாமல், புதுமாதிரி கட்சிக்கு செல்லப்போவதாக கூறியுள்ளார் தேனி கர்ணன்.
அமமுக கட்சியிலிருந்த தேனி கர்ணன், தலைமையின் செயல்பாடுகளால் வெறுப்படைந்து, அங்கேயிருந்து வெளியேறி, திவாகரன் துவங்கிய அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியில் இணைந்துள்ளார்.
அவர், தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் டிடிவி தினகரன் உதவியாளர் நடுவே நடைபெற்ற ஆடியோ உரையாடல் சர்ச்சை குறித்து பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:

அண்ணா திராவிடர் கழகம்
நான் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எங்கள் தளபதியாக இருந்தவர் தங்க தமிழ்செல்வன். நானும், அமமுக தலைமை செயல்பாடு பிடிக்காமல்தான், கட்சியை விட்டு வெளியேறி, இப்போது, அண்ணா திராவிடர் கழகத்தில் இணைந்துள்ளேன்.

சசிகலாவுக்கு வெயிட்டிங்
தங்கத் தமிழ்ச்செல்வனையும் சந்தோஷமாக எங்கள் கட்சியில் இணைக்கப்போகிறோம். அண்ணா திராவிடர் கழகம், கட்சியின், திவாகரன், ஜெய்ஆனந்த் ஆகியோர் தங்கத் தமிழ்ச்செல்வனை அழைக்க தயாராக இருக்கிறார்கள். சசிகலா சிறையிலிருந்து வெளியே வரும்வரை எங்களுடன்தான், தங்கத் தமிழ்ச்செல்வன் இருப்பார்.

திமுக போக மாட்டார்கள்
செந்தில்பாலாஜி திமுகவுக்கு சென்றார். ஏனெனில் அவர் ஏற்கனவே திமுகவிலிருந்தவர். இதனால் அதிமுகவுக்கு இழப்பு இல்லை. ஆனால், அதிமுகவில் உறுப்பினர்களாக உள்ள யாரும் திமுகவுக்கு செல்ல மாட்டார்கள். அதுதான் அதிமுக.அதிமுக தொண்டர்கள் இப்போது, அண்ணா திராவிடர் கழகத்திற்கு வர வேண்டும்.

அதிமுக தலைமை
சசிகலா வெளியே வரும் வரை, எங்கள் கட்சியிலேயே அவர்கள் இருக்க வேண்டும். சசிகலா வெளியே வந்த பிறகு அதிமுகவுக்கு அவர் தலைமையில், ஒற்றைத் தலைமை ஏற்படும். அதன்பிறகு தினகரன் தனி மரமாவார். இவ்வாறு தேனி கர்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications