நடிகர் விஜய் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.. தனியரசு கோரிக்கை
சென்னை: கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அரசின் காவல்துறையின் விதிகளை மீறி பேரணி மற்றும் கூட்டம் நடத்தியதில் கூட்டத்தில் சிக்கி அப்பாவி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமான த.வெ.க தலைவர் நடிகர் விஜய் மீது தமிழக காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் வெளியிட்ட ட்வீட் பதிவில், கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அரசின் காவல்துறையின் விதிகளை மீறி பேரணி மற்றும் கூட்டம் நடத்தியதில் கூட்டத்தில் சிக்கி அப்பாவி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமான த.வெ.க தலைவர் நடிகர் விஜய் மீது தமிழக காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் உயிருக்கு போராடும் நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்திட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், கரூரில் கேட்கும் மரண ஓலம் நெஞ்சை உலுக்குகிறது. நாட்டில் உள்ள மக்கள் எல்லோருடைய மனசும் கருரை நோக்கியே இருக்கிறது. முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என எல்லோரும் கரூர் விரைகின்றனர்...
மதியம் 12 மணிக்கு வருகிறேன் எனச் சொல்லி மக்களைக் காக்க வைத்து, தன் சினிமா பிம்பத்துக்கு கூட்டத்தைக் கூட்டி ஷோ காட்ட, ஒரு சொட்டுத் தண்ணீரும் சிறு உணவும் ஏற்பாடு செய்யாமல், அரசு, நீதிமன்றம் சொன்னதைக் கேட்காமல், காவல்துறையின் பேச்சையும் மதிக்காமல், தன்னுடைய அதிகாரக் கோரப்பசிக்கு அப்பாவி மக்களின் குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கிய நடிகர் விஜய் சென்னையை நோக்கி ஓடி ஒழிகிறான்...!! என் மக்களை இப்படி துயரத்தில் துடிக்க வைத்த விஜய்யை காலம் மன்னிக்காது." இவ்வாறு கூறியுள்ளார்.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications