"அனைவருக்கும் ரொம்ப நன்றி.." பத்ம பூஷன் விருது பெற்ற அஜித் சென்னை ஏர்போர்ட்டில் பேட்டி
சென்னை: நடிகர் அஜித் குமாருக்கு நேற்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற அஜித் குமார் இன்று சென்னை திரும்பினார். இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அஜித் குமார், அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் இவர் நடித்திருந்த குட் பேட் அக்லி திரைப்படம் புதிய வசூல் சாதனை படைத்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. நடிப்பு மட்டுமின்றி, இவர் கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே இவருக்கு இந்தாண்டு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.

நேற்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் அஜித்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அஜித்திற்கு விருது வழங்கினார். பத்ம பூஷன் விருது பெற்ற அஜித் இன்று சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அஜித், அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பத்ம பூஷன் விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முற்பட்டபோது, விரைவில் நேரில் சந்தித்து பேசுவோம் என சொல்லிவிட்டு கிளம்பினார்.












Click it and Unblock the Notifications