கொரோனாவில் இருந்து மீண்ட அப்பாவை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே - விஜய் வசந்த்
கொரோனாவிலிருந்து மீண்டு மூச்சுவிட ஆரம்பிக்கும்போது பாக்டீரியா இன்பெக்ஷன் ஆனது.
சென்னை: அப்பா நலம்பெறவேண்டும் என பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று மறைந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் கூறியுள்ளார். அப்பாவிற்கு இரண்டாவது முறை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது. கொரோனாவால் அப்பா இறக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார். அவருக்கு வயது 70. ஆகஸ்ட் 10 ஆம் தேதி கொரோனா உறுதியானதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரவு 7 மணியளவில் எம்.பி. வசந்தகுமார் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரது மறைவிற்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்த வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த், "சொல்வதற்கு வார்த்தையே இல்லை. அப்பா 6.56-க்கு இயற்கை எய்தினார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அப்பா மிகவும் கவலைக்கிடமாக இருந்தார். திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனாவிலிருந்து மீண்டு மூச்சுவிட ஆரம்பிக்கும்போது பாக்டீரியா இன்பெக்ஷன் ஆனது. இதனால் மீண்டும் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.
கடந்த 2 நாட்களாக எவ்வளவோ மருத்துவர்கள் போராடியும் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை. அப்பா நலம்பெறவேண்டும் என பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி, அப்பாவிற்கு இரண்டாவது முறை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது. கொரோனாவால் அப்பா இறக்கவில்லை எனக் கூறினார்.
கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் வசந்தகுமார் உடல் பாதுகாப்பு உடைகள் அணிவிக்கப்பட்டு முகம் மட்டுமே தெரியும் அளவிற்கு கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு தி. நகர் நடேசன் தெருவில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. வசந்தகுமார் உடலுக்கு பொதுமக்களும், உறவினர்களும், வசந்த் அன் கோ ஊழியர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications