டைனோசருக்குச் சிறகு முளைத்தது போல தமிழ் வானளாவுகிறது! கவிப்பேரரசு வைரமுத்து பெருமை! அரசுக்கு நன்றி
சென்னை: தமிழ் மக்களின் கலாச்சாரத்தை.. வாழ்வியலை.. பலருக்கும் தெரியாத கதைகளை உலகிற்கு உணர்த்தும் கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகள் பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட உள்ளன. கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப் போர், தண்ணீர் தேசம் ஆகிய படைப்புகள் 8 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட உள்ளன.
சர்வதேசப் புத்தகக் காட்சியில் நூற்றுக்கணக்கான தமிழ்ப் படைப்புகளை உலகமொழிகளில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகளும் மொழிபெயர்க்கப்பட்ட உள்ளன.
கவிப்பேரரசு வைரமுத்து.. தமிழின் தவிர்க்க முடியாத கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர். இவரின் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் போன்ற நாவல்களை மக்கள் மறக்க மாட்டார்கள். கிராமத்து சூழ்நிலையில் எழுதப்பட்ட இந்த கதையின் கதை மாந்தர்களும், மொழி நடையும், பின்புலமும் படிப்பவர்களை மெய்மறக்க செய்பவை.
கவிப்பேரரசு மட்டுமல்லாமல்.. தான் ஒரு "கதை"பேரரசு என்பதையும் இந்த கதைகளின் மூலம் நிரூபித்துக்காட்டியவர் வைரமுத்து. கருவாச்சி, கட்டையன், பேய்த்தேவன் என்று இவர் உருவாக்கிய கதை பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அன்பையையும், கோபத்தையும், வைராக்கியதையும், அரசியலையும் போதிக்க கூடியவை.

அதுமட்டுமின்றி வேளாண்மைக்கு எதிராக விஞ்ஞானம் நடத்தும் போரை பற்றிய 3ம் உலகப்போர், தண்ணீர் தேசம் கவிதைகள் எல்லாம் தமிழ் மக்கள் இடையே பெரும் பிரபலம் அடைந்த, தாக்கத்தை ஏற்படுத்திய படைப்புகள் ஆகும். இந்த படைகள் வெறுமனே ஒரு பிரச்னையை, கதையை சொல்லாமல்.. தமிழ் மக்களின் வாழ்வியலையும் உலகிற்கு காட்ட கூடியது.
ஒரு மக்கள் குழுவை பற்றி தெரிந்து கொள்ள அம்மக்கள் குழுவின் படைப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில்.. தமிழர்களின் வாழ்வியலை தெரிந்து கொள்ள கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகள் உதவும். இப்படிப்பட்ட சூழலில் அவரின் படைப்புகளை ரஷ்யன், அரேபியன்,பிரெஞ்சு, ஆர்மேனின், துருக்கி, ஸ்லோவேனியன்,மராத்தி, வங்காளம் மொழிபெயர்த்து வெளியிடுவதும்.. தமிழர்களை பற்றி உலகம் மேலும் அறிய சூழலை ஏற்படுத்தி கொடுக்கும்.
பழங்கனவொன்று
— வைரமுத்து (@Vairamuthu) January 23, 2024
பழுத்திருக்கிறது
தமிழ் உலகமொழிகள்
பேசவேண்டும் என்ற
நீண்ட நெடிய கனவு அது
சென்னை சர்வதேசப்
புத்தகக் காட்சியில்
நூற்றுக்கணக்கான
தமிழ்ப் படைப்புகள்
உலகமொழிகளில் வெளிவர
ஒப்பந்தமிடப்பட்டுள்ளன
எனது
கள்ளிக்காட்டு இதிகாசம்
கருவாச்சி காவியம்
மூன்றாம் உலகப் போர்
தண்ணீர்… pic.twitter.com/FG2OVbkNhD
வைரமுத்து கருத்து; இது குறித்து வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பழங்கனவொன்று பழுத்திருக்கிறது தமிழ் உலகமொழிகள் பேசவேண்டும் என்ற நீண்ட நெடிய கனவு அது. சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சியில் நூற்றுக்கணக்கான தமிழ்ப் படைப்புகள் உலகமொழிகளில் வெளிவர ஒப்பந்தமிடப்பட்டுள்ளன.
எனது கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் மூன்றாம் உலகப் போர் தண்ணீர் தேசம் ஆகிய படைப்புகள் 8 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட உள்ளன. ரஷ்யன், அரேபியன்,பிரெஞ்சு, ஆர்மேனின், துருக்கி, ஸ்லோவேனியன்,மராத்தி, வங்காளம் ஆகிய மொழிகள் தமிழ் பேசவிருக்கின்றன.
நம் உலகக் கனவு பலிக்கத் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டு அரசுக்கு நன்றி. டைனோசருக்குச் சிறகு முளைத்தது போல் தமிழ் வானளாவுகிறது என்று பதிவிட்டுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.












Click it and Unblock the Notifications