தமிழர்களைப் பெருமைப்பட வைத்த தந்தை பெரியார் வழியில்.. துணை முதல்வர் ஓபிஎஸ் போட்ட ட்விட்
சென்னை: தமிழர்களைப் பெருமைப்பட வைத்த தந்தை பெரியார் வழியில் சமநீதி சமத்துவம் தழைக்க பாடுபடுவோம் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர் ஈ.வெ.இராமசாமி. இதனால் தந்தை பெரியார் என்று அனைவராலும் போற்றப்படுகிறார். திராவிட இயக்கத்தை தோற்றுவித்தவர். இன்றைக்கும் ஆளும் அதிமுகவும் சரி, எதிர்க்கட்சியான திமுகவும் சரி கடந்த கிட்டத்தட்ட 50 ஆண்டுளாக இவரது சமூக நீதி கொள்கையை பின்பற்றியே ஆட்சி செய்து வருகின்றன.

இந்நிலையில் தந்தை பெரியாரின் 142 வது பிறந்த தினம் நாளை கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளையொட்டி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்

"காரிருள் சூழ்ந்திருந்த சமுதாயவானில்
பேரொளியாய் வந்துதித்த அறிவுச்சுடர்
சாதிமத பேதங்களை எதிர்த்து பெண் அடிமை விலங்கொடித்து
அறியாமை இருள் நீக்கிய
பகுத்தறிவுப்பகலவன்
தமிழர்களைப்
பெருமைப்பட வைத்த
தந்தை பெரியார் வழியில்
சமநீதி சமத்துவம் தழைக்க பாடுபடுவோம் என இந்நாளில் உறுதி ஏற்போம்." என்று கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications