நான் அப்படி சொல்லியிருக்க கூடாது.. தனது பேச்சையே அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய சபாநாயகர் அப்பாவு
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் காரணமாக அவையில் இன்றும் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது, சபாநாயகர் அப்பாவு தனது பேச்சையே அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக கூறினார். தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இதேபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக 2-வது நாளாக இன்றும் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. அவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்திருந்த அதிமுக எம்எல்ஏக்கள், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விஷசாராய உயிரிழப்பு தொடர்பாக விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர்.

கேள்வி நேரத்திற்கு முன்னால் அவையின் நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிப்பது சரியல்ல என்று அப்பாவு சபாநாயகர் அப்பாவு கண்டிப்பு காட்டினார். மேலும் சட்டமன்றம் மக்கள் பிரச்சினையை பேச வேண்டிய இடம் என்றும் அப்பாவு கூறினார். தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு கூறுகையில், "நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தேன். முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையோடு சபை நடவடிக்கைகளில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். இன்றைக்கு வந்த உடன் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதில் அவர்களுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.
நாகரீகமாக சபையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல நான் பேசும் போது குறிப்பிட்ட ஒரு வார்த்தையை மூத்த அமைச்சர் கே என் நேரு நினைவுபடுத்தினார். அந்த வார்த்தையை நான் அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறேன். அந்த வார்த்தையை நான் பயன்படுத்தியிருக்க கூடாது.
ஆகவே நாகரீகமாக அதிமுக உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். வரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதியாக சொல்கிறேன்" என்றார்.
தமிழக சட்டசபை இன்று 3வது நாளாக கூடியது. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையில் வருகை தந்தனர். அவை கூடியதும் சபாநாயகர் அப்பாவு முதலில் கேள்வி நேரம் என்றும் அதன் பிறகு கள்ளக்குறிச்சி சாராய விவகாரம் பற்றி பேச அனுமதிக்கப்படும் என்றார். ஆனால், அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி பேச அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications