இண்டேன், எச்பி, பாரத் கேஸ் கஸ்டமர்களுக்கு சூப்பர் டிப்ஸ்.. போன்லயே சிலிண்டர் புக் பண்றது இவ்வளவு ஈஸி
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு இப்போது பல்வேறு எளிமையான மற்றும் அதிவேக வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.. கஸ்டமர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே செல்போன் ஆப்கள் மூலம் சிலிண்டர்களை மிக எளிதாக புக்கிங் செய்ய முடியும்.. அந்தவகையில் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ள எளிமையான சில வழிமுறைகள் பார்க்கலாம்.
வாட்ஸ்அப் மூலம் கேஸ் முன்பதிவு செய்யும் முறை மிகவும் பிரபலமாக உள்ளது.. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்களுக்கு "REFILL" அல்லது "Hi" என்று மெசேஜ் அனுப்புவதன் மூலம் சிலிண்டர்களை உடனடியாக முன்பதிவு செய்ய முடியும்.. இது ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது..

கேஸ் சிலிண்டர் புக்கிங்
அடுத்ததாக, மொபைல் செயலிகள் மூலம் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.. அந்தந்த நிறுவனங்களின் பிரத்யேக செயலிகளான இந்தியன் ஆயில் ஒன் அல்லது எச்பி பே போன்றவற்றை டவுன்லோடு செய்து அதன் மூலம் ஆர்டர் செய்யலாம்.
அடுத்ததாக, எஸ்எம்எஸ் மூலமாகவும் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய முடியும். கஸ்டமர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பரிலிருந்து குறிப்பிட்ட எண்களுக்கு மெசேஜ் அனுப்புவதன் மூலம் இந்த சேவையை பெறலாம்.. இணைய வசதி இல்லாத நேரங்களில் இந்த முறை மிகவும் கை கொடுக்கிறது.
ஆன்லைன் முன்பதிவு
அடுத்ததாக, ஐவிஆர்எஸ் எனப்படும் போன் அழைப்பு முறை இப்போதும் புழக்கத்தில் உள்ளது.. கஸ்டமர்கள், அந்தந்த நிறுவனத்தின் அழைப்பு மைய எண்களுக்கு போன் செய்து, தானியங்கி குரல் வழி அறிவுறுத்தல்களை பின்பற்றி சிலிண்டர்களை பதிவு செய்யலாம்.
அடுத்ததாக நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வெப்சைட்கள் மூலமாகவும் முன்பதிவு செய்ய முடியும்.. லாகின் செய்து ஆன்லைன் மூலமாகவே கட்டணத்தையும் செலுத்திவிடும் வசதி இதில் உள்ளது.
அடுத்ததாக, பொது சேவை மையங்கள் அல்லது ஏஜென்சிகளுக்கு நேரடியாகச் சென்று முன்பதிவு செய்யும் பழைய முறையும் நடைமுறையில் இருக்கிறது.. இருந்தாலும், தற்போது பெரும்பாலானோர் டிஜிட்டல் முறைகளையே அதிகம் விரும்புகிறார்கள். குறிப்பாக அமேசான் பே, கூகுள் பே மற்றும் போன்பே போன்ற மூன்றாம் தரப்பு செயலிகள் மூலமாகவும் சிலிண்டர்களை முன்பதிவு செய்து சலுகைகளை பெற முடியும்.
எல்பிஜி சிலிண்டர் பதிவு
கஸ்டமர்கள் சிலிண்டர் முன்பதிவு செய்யும் போது சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.. எப்போதும் உங்கள் மொபைல் எண்ணை கேஸ் ஏஜென்சியில் பதிவு செய்து வைத்திருப்பது அவசியமாகும்.. ஏனென்றால் பதிவு செய்யப்பட்ட நம்பரிலிருந்து தொடர்பு கொண்டால் மட்டுமே முன்பதிவு செயல்முறை எளிதாக முடியும்.
ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும்போது கேஷ்பேக் ஆஃபர்கள் கிடைக்கிறதா என்பதை சரிபார்ப்பது பணத்தை சேமிக்க உதவும்.. மேலும் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்போது சீல் சரியாக உள்ளதா என்பதையும், அதன் எடையையும் சரிபார்த்து வாங்குவது பாதுகாப்பானது.
அவசர நம்பர்கள்
கேஸ் கசிவு போன்ற அவசர காலங்களில் 1906 என்ற ஹெல்ப்லைன் எண்ணை உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.. மேற்கண்ட வழிமுறைகளும் வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதையோ அல்லது ஏஜென்சிகளுக்கு அலைவதையோ முழுமையாக தவிர்க்க உதவுகின்றன.
எந்த நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் இந்த வசதிகள் சமையல் எரிவாயு விநியோகத்தை மேலும் எளிமைப்படுத்தியுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் தேவையற்ற தாமதமின்றி தங்கள் எரிவாயு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இப்படி டிஜிட்டல் முறைகளை பயன்படுத்துவது நேரத்தை மிச்சப்படுத்துவதுடன் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்கிறது. எளிய மக்கள் கூட தடையின்றி சிலிண்டர் பெற இதுவே சிறந்த வழியாகும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications