தமிழகத்தில் படிப்படியாக மதுபானக்கடைகள் மூடப்படும் - அதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதி!
சென்னை: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை விறுவிறுப்புடன் செய்து வருகின்றன. திமுக கூட்டணியில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
அதிமுக தேர்தல் அறிக்கை:
திமுகவை தொடர்ந்து அதிமுகவும் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, அங்கன்வாடி குழந்தைகளுக்கும், அனைத்து நிலை பள்ளி மாணாக்கர்களுக்கும் தினந்தோறும் 200 மி.லி. பால் / பால் பவுடர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 50 சிறப்பு அம்சங்களை இதில் காணலாம்.
51. புதிய கால்நடை மருத்துவக்கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள்
தமிழ்நாட்டில் மேலும் ஐந்து புதிய கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் உருவாக்கப்படும்.
52. தென் தமிழ்நாட்டில் உலகத் தரத்திலான கால்நடைப் பூங்கா
தென் தமிழ்நாட்டில் உலகத் தரத்திலான கால்நடைப் பூங்கா ஒன்று அமைக்கப்படும்.

53. பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அத்தகைய பாதிப்பிலிருந்து மக்களுக்கு உதவிட பெட்ரோல், டீசல் விலையினை குறைத்திட மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கனிசமாக குறைத்திட மைய அரசை வலியுறுத்தும்.
54. மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500-லிருந்து ரூ.2500/- உதவித்தொகை உயர்வு
மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார உதவித் தொகை ரூ.1500/-லிருந்து ரூ.2500/-ஆக உயர்த்தப்படும்.
55. 100 நாள் வேலை - 150 நாட்களாக உயர்வு
"100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம்" "150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக" விரிவாக்கப்படும். பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவுப் படுத்தப்பட மைய அரசை வலியுறுத்துவோம்.
56. அம்மா பசுமை வீடு திட்ட மானியம் ரூ.3.40 இலட்சமாக உயர்வு
அம்மா பசுமை வீடு திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் மானியம் ரூ.2,43,000/-லிருந்து ரூ.3,40,000/- ஆக உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
57. பொங்கல் பண்டிகைக்கு உதவித்தொகை தொடரும்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை, மக்கள் மகிழ்ச்சியாக கொம்டாட ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசுப் பொருட்களுடன் உதவித்தொகையும் தொடர்ந்து வழங்கப்படும்.
58. மாதந்தோறும் மின் பயனீட்டு கணக்கீடு
இரண்டுமாத கணக்கீட்டிற்கு பதிலாக, மாதந்தோறும் மின் பயனீட்டு கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.
59. 9-10-11-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சத்துணவு
உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் விரிவுப் படுத்தப்படும்.
60. தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு தனியார் பங்களிப்புடன் காலை சிற்றுண்டி விரிவாக்கம்.
தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு என தொடங்கப்பட்ட தனியார் பங்களிப்புடன் கூடிய காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், விரிவுப்படுத்தி செயல்படுத்தப்படும்.
61. அரசு பள்ளி சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி
அரசு பள்ளியில் படிக்கும் சுயநிதி வகுப்பு மாணாக்கர்களுக்கும் மடிக்கணினி சக மாணவர்களைப் போல வழங்கப்படும்.
62. அங்கன்வாடி குழந்தைகளுக்கும், அனைத்து நிலை பள்ளி மாணாக்கர்களுக்கும் தினந்தோறும் 200 மி.லி. பால் / பால் பவுடர்
அங்கன்வாடி குழந்தைகளுக்கும், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என அனைத்து நிலை மாணாக்கர்களுக்கும் தினந்தோறும் 200 மி.லி பால் / பால் பவுடர் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
63. பால் உற்பத்தியாளர் - நுகந்வோர் நலன்
அ. பால் உற்பத்தியாளர்களின் உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை ரூ.2/- உயர்த்தி வழங்கப்படும்.
ஆ. நுகர்வோந்களின் நலன் கருதி பால் விற்பனை விலை ரூ.2/- குறைக்கப்படும்.
64. அம்மா மினி கிளினிக்குக்களுக்கு நவீன மருத்துவ வசதியுடன் கூடிய புதிய கட்டிடங்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிந்தனையில் உதித்த அனைவராலும் போற்றப்படுகின்ற அண்மையில் தமிழ்நாடு முழுவாதும் துவக்கப்பட்ட சுமார் 2,000 அம்மா மினி கிளினிக்குக்களுக்கு நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படும். இது தமிழ்நாடு அரசின் சிறப்புத்திட்டமாக செயல்படுத்தப்படும்.
65. புற்றுநோய் சிகிச்சைக்கு முக்கியத்துவம்.
அ. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு டாக்டர். சாந்தா நினைவு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டம்
தொடங்கப்படும்.
ஆ. புற்றுநோய் சிகிச்சைக்கு என வசதிகள் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்படும்.
இ. அரசு மற்றும் தனியார் கூட்டுப் பங்களிப்புடன் அனைத்து மாவட்டங்களிலும் புற்று நோய் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும். இங்கு ரேடியேசன் மற்றும் கீமோதெரப்பி சிகிச்சைகள் வழங்கப்படும்.
ஈ. அம்மா தங்க திட்டம் கீழ் நடைபெறும் முழு உடல் பரிசோதனை மற்றும் புற்று நோய் சிகிச்சை அனைத்து மாவட்ட மற்றும்மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளுக்கும்
விரிவுபடுத்தப்படும்
உ. தற்போது குழந்தையில்லாதோர் தனியாரிடம் மிகுந்த செலவில் கருத்தரிப்பு செய்ய வேம்டிய நிலையில், ஏழை மற்றும் எளியோர் பயன்பெறும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரிப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்படும்.
66. மகப்பேறு விடுப்பு, ஒரு வருடமாக உயர்வு
பெண் அரசு ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தை வளர்ப்பை கருத்தில் கொண்டு, பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மகப்பேறு விடுப்பு 9 மாத காலத்திலிருந்து ஒரு வருடமாக உயர்த்தப்படும்.
67. மகப்பேறு உதவித்தொகை அதிகரிப்பு
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 18,000 ரூபாயிலிருந்து 21,000 ரூபாயாக உயர்த்தப்படும்
68. பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட நிதியுதவி உயர்வு
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின், வைப்பு நிதியாக வழங்கப்பட்டு வந்த முதலீட்டுத்தொகை 50,000 ரூபாயிலிருந்து 70,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
69. பெண்களின் பாதுகாப்புக்கு அனைத்து நகரங்களிலும் காவலன் செயலி
எந்த நேரத்திலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னையில் செயல்பட்டு வரும் காவலன் செயலி மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
70. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தேவையான கடனுதவி மற்றும் மகளிர் வங்கி
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நியாயமான வட்டியில் கடன் வழங்க தனியாக மகளிர் வங்கி உருவாக்கப்பட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தேவையான அளவு கடனுதவி வழங்கப்படும்.
71. சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருளை விற்க மின்னணு வணிக முறை
சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்துவதற்கு மின்னணு வணிக முறை ஊக்குவிக்குப்படும்.
72. அம்மா பேங்கிங் கார்டு திட்டம்
எழை, எளிய நடுத்தர மக்கள் அனைவரும் நிதிச் சேவைகளை பயன்டுத்தும் வகையில் வழங்கப்படும். இத்திட்டமானது, அதிக வட்டிக்கு தனியாரிடம் பெற்றுள்ள கடன்களை சுலபத்தவணையில் திருப்பி செலுத்தும் வகையில், அவந்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். இத்திட்டம் வங்கிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
73. அனைத்து நகரங்களிலும் அம்மா ரோந்து வாகனங்கள்.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட அம்மா ரோந்து வாகனங்கள் மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
74. இரண்டாம் கட்ட நகரங்களில் சிசிடிடி கண்காணிப்பு
உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் சிசிடிவி கண்காணிப்பில் சென்னை முதலிடம் வகிக்கிறது. சட்டம் ஒழுங்கை மேலும் மேம்படுத்தும் விதமாக, இரண்டாம் கட்ட நகரங்களிலும் உலகத்தரத்திலான கட்டமைப்பு உருவாக்கப்படும்.

75. கட்டணமில்லா வாகன பயிற்சி - ஓட்டுநர் உரிமம்
18 வயது நிரம்பியோர் அனைவருக்கும் கட்டணமில்லா இரு சக்கர வாகன பயிற்சியுடன் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
76. ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ. 25,000/- மானியத்தில் எம்.ஜி.ஆர் பசுமை ஆட்டோ
ஆட்டோ ஓட்டுநர் உரிமம் பெற்ற ஆண், பெண் ஓட்டுநர்களின் வளமான வாழ்விற்கு ரூ.25,000/- மானிய விலையில் "எம்.ஜி.ஆர் பசுமை ஆட்டோ (ந-ஹரவடி)" வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
77. மதுபானக் கடைகள் படிப்படியாக மூடப்படும்
தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை தீவிரமாக அமல்படுத்தும் நோக்கில் படிப்படியாக மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
78. கூட்டுறவு வீட்டு வசதி சங்க கடனை திருப்பி செலுத்துபவர்களுக்கு வட்டி, அபராத வட்டி தள்ளுபடி
கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மூலம் கடன்பெற்று வீடுகட்டியவர்களின் நிலுவைக்கடன் மற்றும் அடமானக் கடனை தொகையை செலுத்துபவர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
79. மதுரை விமான நிலையத்திற்கு தேசியத்தலைவந் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டுதல்.
மதுரை விமான நிலையத்திற்கு தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட உரிய நடவடிக்கைகள் எடுக்க மைய அரசை அதிமுக வலியுறுத்தும்.
80. மைய அரசு புதியதாக அறிமுகப்படுத்தியிருக்கும் குடியுரிமைத் திருத்த தடைச்சட்டத்தை கைவிட வலியுறுத்தல்
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை கைவிட வேம்டும் என்று மத்திய அரசை அதிமுக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்தும்.
81. கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவரல்
பொதுப்பட்டியலில் உள்ள கல்வியினை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொம்டுவர மத்திய அரசினை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
82. அவசியமான இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குதல்
அவசியமான இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
83. கண்ணியமிகு காயிதே மில்லத் அவந்கள் பெயரில் இஸ்லாமியப் பல்கலைக்கழகம்.
சிறுபான்மை மக்களின் பெருவாழ்வுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக சென்னை காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் கங்ணியமிகு காயிதே மில்லத் அவந்களின் பெயரால் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
84. திருக்குர்ஆனை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்த ஆ. கா. அப்துல் ஹமீது பாகவி அவந்கள் பெயரில் இஸ்லாமிய இலக்கிய கருவூலம்" உருவாக்கப்படும்.
திருக்குர்ஆனை தமிழில் மொழிபெயந்த்து தமிழ் மும்லிம் சமூதாயத்திற்கான இம்லாமிய அறிவுசார் கருத்துக்களை எளிமையாக வழங்கிய அப்துல் ஹமீது பாகவி அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக, தமிழக அரசின் சாந்பில் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய இலக்கிய கருவூலம்" ஒன்று உருவாக்கப்படும். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் அதற்கென்று தனி உள்அரங்கத்தோடு கூடிய நூலகக்கட்டிடம் உருவாக்கப்படும்.
85. தமிழ் அறிஞர் கீகன் பால்கு வாழ்ந்த இல்லம் அரசுடமை
ஜெர்மானிய தமிழ் அறிஞர் சீகன் பால்கு அவர்களின் நினைவாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அவர் வாழ்ந்த இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டு, அங்கு "பொது நூலகம்" அமைக்கப்படும்.
86. இந்து ஆன்மீகப் பயணச்சலுகைக் கட்டணம் உயர்த்தி வழங்கப்படும்.
இந்து ஆன்மீகப் பயணம் மேற்கொள்வோருக்கு, கயிலை மலை - மானசரோவர், நேபாள நாட்டின் - முக்திநாத், ஹரித்துவார், ஜம்மு-காத்ரா வைஷ்ணவ தேவி திருக்கோயில் ஆகிய ஆலயங்களுக்கு ஆன்மீகப் பயணம் சென்று வர பயணச்சலுகைக் கட்டணம் உயர்த்தி வழங்கப்படும்.
87. ஹஜ் பயணத்திற்கு செல்ல வழங்கப்படும் தொகை உயர்த்துதல்
இஸ்லாமியர்கள் தற்போது ஹஜ் பயணத்திற்கு செல்ல அரசால் வழங்கப்படுகிற மானியம் ரூபாய் 6 கோடியை உயர்த்தி ரூபாய் 10 கோடியாக வழங்கப்படும்.
88. ஜெருசலேம் புனித பயணத்திற்கு சலுகை
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளும் 1000 பேருக்கு ரூ.37,000/- அரசு வழங்கும் திட்டத்தில் யாத்திரிகர்களுக்கு முழு கட்டணத்தையும் அரசே செலுத்தும்.
89. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பணிபுரியும் அடிப்படைப் பணியாளர்களுக்கு நலவாரியம்.
அனைத்து தேவாலயங்களிலும், பணியாற்றும் அடிப்படைப் பணியாளர்களான ஓசியார், கோயில்பிள்ளை, உபதேசியார் போன்றோரின் நலன் காக்க நலவாரியம் அமைக்கப்படும்.
90. சிறுபான்மையினருக்கு மயான இடம் விலையில்லாமல் வழங்குதல்
சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் இயற்கை எய்துகிறபோது அவர்களுடைய உடலை அடக்கம் செய்யப் போதிய இடவசதி இல்லாத நிலை இருந்து வருகிறது. அவர்களுக்கு, அரசு தேவையான இடங்களை கண்டறிந்து போதுமான இடத்தை விலையில்லாமல் அளிக்கும்.
91. அனைத்து மத பழுதடைந்த ஆலயங்கள் புனரமைப்பு
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ், உள்ள திருக்கோயில்கள், இஸ்லாமிய மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகியவை பழுதடைந்து இருப்பின், அவற்றிற்கு தேவையான நிதி ஒதுக்கி செப்பனிடப்பட்டு, புனரமைப்பு செய்யப்படும்.
92. கிராமஊர்க்கோயில் பூசாரிகளுக்கு ஊக்க ஊதியம்
கிராம ஊர்க்கோயில்களில் பூஜை செய்யும் கோயில் பூசாரிகளுக்கு மாத ஊதியமாக ரூ.2,000/- வழங்கப்படும்.
மேலும், வருமானம் இல்லாத அனைத்து மத கோயில்களுக்கும் இலவச ஒரு விளக்கு திட்டம் அமல்படுத்தப்படும்.
93. திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம் விரிவாக்கம்.
திருக்கோயில்களில் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் அன்னதானத் திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படும்.
94. தூய்மைப் பணியாளர் ஊதியம் ரூ.6000/- ஆக உயர்வு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் மாதாந்திர ஊதியமாக ரூ.6,000/- வழங்கப்படும்.
95. மதிப்புமிகு முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள்
தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் அனைத்து மாவட்டத்திலும் "மதிப்புமிகு முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள்" அமைக்கப்படும்.
96. ஆதிதிராவிடர் தாட்கோ-கடன் தள்ளுபடி
தாட்கோ மூலம் ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்ட பொருளாதார மேம்பாட்டுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
97. ஆதிதிராவிடருக்கு புதிய தொகுப்பு வீடுகள்
ஆதிதிராவிடர் மக்களின் பழுதடைந்த தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிய தொகுப்பு வீடுகள் அரசால் கட்டித்தரப்படும்.
98. மதம் மாறிய ஆதிதிராவிடருக்கு பழைய சலுகையே தொடரும்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மக்கள் மதம் மாறினால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு அளிக்கும் அனைத்து சலுகைகளையும் தொடர்ந்து அவர்கள் பெற்றிட மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும்.
99. பழங்குடியினர் பட்டியலில் விடுப்பட்ட இனத்தவரை சேந்த்தல்.
தமிழ்நாட்டில் படுகர், குருவிக்காரர், லம்பாடி, வேட்டைக்காரர், நரிக்குறவர் போன்ற இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கையை நிறைவேற்ற தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும்.
100. தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் ஆணையம்
மாநில அளவிலான "தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம்" விரைவில் அமைக்கப்படும்.












Click it and Unblock the Notifications