Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

32 கேஸ்.. 5 முறை குண்டாஸ்.. 2வது என்கவுண்டர்! ஆற்காடு சுரேஷின் வலது கரம்! சீசிங் ராஜாவின் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜா போலீசார் நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார். சீசிங் ராஜா யார்? அவரது பின்னணி என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

armstrong police cheasing raja

அவரது கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் பிரபல ரவுடியான திருவேங்கடம், திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், தமாக மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரன், பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை, கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப், விஜயகுமார், முகுந்தன், விக்னேஷ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரைத் தவிர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 பேர் சிறையில் இருந்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது தந்தை நாகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமல்லாமல், இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரன் சிறையில் இருந்த படியே கொலைத் திட்டத்திற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததும். வழக்கறிஞரும் ரவுடியுமான சம்பவம் செந்தில் கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து தலைமறைவாக இருக்கும் சம்போ செந்தில், சீசிங் ராஜா, மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபல ரவுடிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஹரிஹரன், மலர்க்கொடி, சதீஷ்குமார், கோ ஹரிஹரன், அஞ்சலை,. பிரதீப்,. முகிலன், விஜயகுமார் உள்ளிட்ட 25 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து, ஆற்காடு சுரேஷின் நண்பரான பிரபல ரவுடி சீசிங் ராஜாவையும் தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் சீசிங் ராஜா செங்கல்பட்டு மாவட்டத்தில் நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக ஆஜராக வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக அந்த வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டினர் போலீசார். சீசிங் ராஜா குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் அந்த போஸ்டர்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் ராஜா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்று தனிப்படை போலீசார் சீசிங் ராஜாவை கைது செய்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. கடந்த 60 நாட்களுக்கும் மேலாக சீசிங் ராஜா தேடப்பட்டு வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தது முக்கிய திருப்பமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ராஜா சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து நீலாங்கரை அருகே அவர் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாகவும், அதனை காட்டுமாறு போலீசார் கூறியதாக கூறப்படுகிறது.

ஆயுதங்களை காட்டுவது போல் சென்ற சீசிங் ராஜா தப்பியோட முயன்றதாகவும் காவல் துறையினரை நோக்கி சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்து சீசிங் ராஜா பலியானார். இதனையடுத்து அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சீசிங் ராஜா 2வதாக என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பதவியேற்ற பிறகு இது 3வது என்கவுண்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சீசிங் ராஜாவின் பின்னணி குறித்து பார்க்கலாம்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பர் தான் சீசிங் ராஜா. அவர் மீது ஐந்து கொலை வழக்குகள் உள்ளிட்ட 32க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான சீசிங் ராஜா வெளிமாநிலங்களில் தலைமறைவாக இருந்து ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்ளிட்ட பல குற்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார். இவர் மீது ஆயுத தடைச் சட்டம், ஆட்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஐந்து முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டவர் தான் இந்த சீசிங் ராஜா.

ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பொன்னை பாலு திட்டமிட்ட நிலையில், ரவுடிகளை ஒருங்கிணைப்பது, பணம் திரட்டியது என பல வகைகளில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சீசிங் ராஜா தொடர்புடையதாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கில் ரௌடி திருவேங்கடம் கடந்த ஜூலை 14ஆம் தேதி என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த நிலையில் 23ஆம் தேதி செப்டம்பரில் சீசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்பட்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+