தலை வண்டலூர் ஏரியில்.. உடல்கள் 6 பீஸாக செம்பரம்பாக்கம் ஏரியில்.. அதிர்ந்த சென்னை.. திடுக் தகவல்
சென்னை: சென்னை அருகே செம்பரம்பாக்கம் ஏரியில் 6 துண்டுகளாக வெட்டி வீசப்பட்டவர் யார் குன்றத்தூர் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் காவலாளியாக பணிபுரிந்த பூமிநாதன் என்பவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொல்லப்பட்டு உடல் வீசப்பட்டது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே சிறுகளத்தூர் பகுதியில் செம்பரம்பாக்கம் ஏரியில் தலை, கை, கால்கள் இல்லாமல் ஆண் பிணம் ஒன்று வீசப்பட்டு இருப்பதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கை, கால்கள் இல்லாத 6 துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட ஆண் உடலை மீட்டு, கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார்? என்பது குறித்து விசாரித்தனர். துண்டிக்கப்பட்ட நபரின் தலை மற்றும் உடல் பாகங்களை போலீசார் தேடி வந்தனர்.

ஏரிக்கரையின் அருகிலேயே துண்டிக்கப்பட்ட அவரது 2 கால்களும் கிடைத்தது. இதை வைத்து கொலை செய்யப்பட்ட நபர் யார்?, கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து குன்றத்தூர் போலீஸ் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இதனிடையே அந்த நபர் அணிந்திருந்த உடைகளை அடையாளமாக கொண்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காணாமல் போனவர்கள் குறித்த புகாரின் பட்டியலையும் ஒப்பிட்டு பார்த்தனர். ஆனால் ஒரு மாதத்துக்கு பின்பு உடையின் காரணமாக அடையாளம் கண்டனர். கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் கடலூரை சேர்ந்த பூமிநாதன் (வயது 38) என்பதும் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
கடந்த சில நாட்களாக குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்ததால் தாமதமாகவே நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கணவரை காணவில்லை என அவரது மனைவி புகார் அளித்தார். அந்த புகாரை விசாரித்த போலீசார், குன்றத்தூரில் மீட்கப்பட்ட உடலில் இருந்த உடைகளை காண்பித்து அடையாளம் காட்டுமாறு கேட்டனர் அது மாயமான தனது கணவர் பூமிநாதன் அணிந்திருந்த உடை என்பதை அவரது மனைவி உறுதி செய்தார். இதையடுத்து போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகினது.
கடலூரை சேர்ந்த பூமிநாதன் சென்னையில் தங்கி, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். அப்போது அங்கு பணி புரியும் மற்றொரு பெண் காவலாளி நாகலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் நாகலட்சுமிக்கு சிறுகளத்தூர் பகுதியை சேர்ந்த 30 வயதாகும் பிலிப்ஸ் என்பவருடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாகலட்சுமியுடன் பூமிநாதன் பழகியதை கேட்டு கோபம் அடைந்த பிலிப்ஸ் தனது நண்பர் வினோத்(32) என்பவருடன் சேர்ந்து பூமிநாதனை கொலை செய்ய முடிவு செய்தார். அதேநேரம் முதலில் கண்டித்து பார்ப்போம்.. கேட்கா விட்டால் காலி செய்யலாம் என்று நினைத்த பிலிப்ஸ், அவரை தனியாக அழைத்து சென்று கண்டித்துள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் பூமிநாதனை மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டாராம்.
அதில் பூமிநாதன் இறந்து போன நிலையில் அவரது உடலை மறைப்பதற்கு தலை, கை, கால்கள் போன்றவற்றை வெட்டி கல்லால் கட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் வீசியுள்ளனர். பின்னர் தலையை மட்டும் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வண்டலூர் பகுதியில் உள்ள ஏரியில் வீசினார்களாம். இதையடுத்து பூமிநாதன் தலையை போலீசார் கைப்பற்றி உள்ளனர். முதற்கட்டமாக வினோத் மற்றும் பிலிப்ஸ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications