3வது அம்பயர் தூக்கு போட்டு செத்துரணும்.. அப்படி திட்டினதுக்கு ஸாரி.. வருத்தப்பட்ட குட்டிப் பையன்!
3-வது அம்பயரை திட்டிய சிறுவன், மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளான்
Recommended Video
சென்னை: "3-வது அம்பயரை நான்தான் திட்டினேன். அதுக்கு ரொம்ப ஸாரி. சிஎஸ்கே மேல ஒரு பாசத்துல, உணர்ச்சிவசப்பட்டு திட்டிட்டேன்" என்று சம்பந்தப்பட்ட சிறுவன் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளான்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. கடைசி பந்து வரை படு விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் மும்பை ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை தோற்றது. இது சென்னை ரசிகர்களை பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எப்படியாவது ஜெயித்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை அணி தோற்றதை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை.

செத்துருப்பான்
இதில் ஒரு சிறுவன் அழுதே விட்டான். இது சம்பந்தமாக ஒரு வீடியோவும் வெளியானது. அதில், "தோனி அவுட்டே இல்லை.. சனியன் பிடிச்சவன்.. 3வது அம்பயர் தூக்குப் போட்டு செத்துருப்பான்" என்றும் கோபமாக நடுவரை சபித்தான்.

அதிர்ச்சி
இந்த வீடியோ வைரலானது. என்னதான் விளையாட்டு என்றாலும், தோனியின் தீவிர விசிறி என்றாலும், பெரியவர்களை இப்படி சிறுவன் பேசியது தவறுதான். அது மட்டுமில்லை, பிள்ளைகளை கிரிக்கெட் எந்த அளவுக்கு மாற்றி வைத்துள்ளது என்பதும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

மன்னிப்பு வீடியோ
இந்தநிலையில், 3வது அம்பயர் தூக்குப் போட்டு செத்துருப்பான் என்று சாபம் விட்டு அழுத சிறுவன் இப்போது மன்னிப்பு கேட்டுள்ளான். அவன் பெயர் கிரித்திகேஷ். அண்ணாநகரில் ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். மன்னிப்பையும் வீடியோ மூலமாகவே அந்த சிறுவன் கேட்டுள்ளான். அப்போது சிஎஸ்கே யூனிபார்ம் கொண்ட டி-ஷர்ட்டைதான் போட்டிருக்கிறான்.

எல்லாருக்கும் ஸாரி
அந்த வீடியோவில் "3-வது அம்பயரை நான் திட்டினேன். அதுக்கு ரொம்ப ஸாரி. சிஎஸ்கே மேல ஒரு பாசத்துல, உணர்ச்சிவசப்பட்டு திட்டிட்டேன். எல்லாருக்கும் ஸாரி" என்கிறான்.

ஓடி போவேன்
தோனி இப்போ உங்கவீட்டுக்கு வந்தா என்ன செய்வீங்க?ன்னு என்று ஒரு குரல் கேட்கிறது. அதற்கு சிறுவன், "வீட்டுக்கு தோனி வந்தா, நான் காலை தொட்டு கும்பிடுவேன், தோனியை பார்த்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கும். அங்கிருந்து என்னை தோனி கூப்பிட்டால், இங்க இருந்து அவர் வீட்டுக்கே ஓடிப்போய்டுவேன்" என்று சிரித்தவாறே சொல்கிறான்.
-
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications