சென்னை அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்தது.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்
சென்னை: சென்னை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை போரூர் அருகே மதுரவாயல் - தாம்பரம் புறவழிச்சாலையில் பெண் ஒருவர் காரை ஓட்டிக் கொண்டு சென்றார். குறிப்பிட்ட காரை இயக்கி சென்ற பெண் பைபாஸ் சாலையில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

சாலையில் மித வேகத்தில் சென்று கொண்டிருந்த கார், எதிர்பாராத வகையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. கார் தீப்பிடித்ததை கண்ட பெண் பெரும் அதிர்ச்சியடைந்தார்.
மித வேகத்தில் இயக்கியதால் வாகனத்தில் தீப்பற்றியதை கண்டு உடனடியாக சுதாரித்த அந்த பெண், துரிதமாக செயல்பட்டார். சாலையின் ஓரமாக காரை நிறுத்தி அதிலிருந்து வெளியேறிய அவர் உயிர் தப்பினார்.
அவர் இறங்கிய சில நிமிடங்களில் கார் பயங்கரமாக தீப்பற்றி எரிய துவங்கியுள்ளது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பற்றி எரியும் கார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிவதை கண்ட மக்கள், பெரும் பதற்றம் அடைந்தனர். எனினும் அதனை ஓட்டி வந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தகவலை கேட்டு நிம்மதியடைந்தனர்.












Click it and Unblock the Notifications