சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யானை வழித்தடத்தில் உள்ள செங்கல் சூளைகளை உடனே அகற்றுங்க... தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு!

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: யானை வழித்தடத்தில் உள்ள செங்கல் சூளைகளை தாமதமின்றி அகற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    சென்னை: யானைகள் வழித்தடத்தில் செங்கல் சூளைகள்… அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு… சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி!

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, ஒருங்கிணைந்த பதில்மனுவை தாக்கல் செய்ய தலைமை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    The Chennai HC has ordered the TN govt remove the brick kilns along the elephant route without delay

    மலை பகுதி பாதுகாப்பு அமைப்பின் அனுமதி பெறாமல் கோவை தடாகம் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள 200 செங்கல் சூளைகளை மூடக் கோரி சின்ன தடாகத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும், யானைகள் நல ஆர்வலரான முரளிதரனும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல், நில வளத்திற்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    போடுங்கம்மா ஓட்டு... டிரம்ஸ் அடித்து... நெசவு நெய்து ... வாக்கு சேகரித்த கனிமொழி எம்.பி!போடுங்கம்மா ஓட்டு... டிரம்ஸ் அடித்து... நெசவு நெய்து ... வாக்கு சேகரித்த கனிமொழி எம்.பி!

    அப்போது, கனிம வளத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோகரன், வனத்துறையுடன் கலந்தாலோசித்து விதிமீறல் செங்கல் சூளைகளை கண்டறிய இருப்பதாகவும், அதுகுறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார்.அதனை பதிவுசெய்த நீதிபதிகள், அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பிற இடங்களில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கள்சூளைகளை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

    மேலும் யானைகள் வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள செங்கல் சூளைகளை தாமதமின்றி அப்புறப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். சம்பந்தப்பட்ட துறை சார்ந்த செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, ஒருங்கிணைந்த பதில்மனுவை தாக்கல் செய்ய தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

    English summary
    The Chennai High Court has ordered the Tamil Nadu government to remove the brick kilns along the elephant route without delay
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X