சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வரும் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்… ஹைகோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை:ஜாக்டோ, ஜியோ அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வரும் 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ,ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இந்தப் பருவத்தேர்வுக்கான பாடங்கள் நடத்தி முடிக்கப்படாமல் உள்ளது.

 The chennai high court ordered to teachers to withdraw protest and join duty on january 25

எனவே, பள்ளிகை மூடக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி கோகுல் என்ற மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோகுல் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய கோரி, மாணவர் கோகுல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் வரும் 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஒன்று கூடி ஆலோசித்து முடிவு செய்ய போவதாக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறியுள்ளளனர்.

English summary
The Chennai high court today ordered to Jacto geo protesters, to withdraw protest and join duty on jan.25.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X