தமிழகத்தில் கொளுத்தும் வெயில் : சேலத்தில் 101.84 பாரன்ஹீட் - மதுரை, கரூரில் சுட்டெரித்தது
தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 38.8 டிகிரி செல்சியல் அதாவது 101.84 டிகிரி பாரன்ஹீட் பதிவாயுள்ளது.
சென்னை: தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அதிகபட்சமாக சேலத்தில் 101.84 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரை, கரூர், பரமத்தியில் வெப்பநிலை 99.5 டிகிரி பாரன்ஹீட் ஆக பதிவாகியுள்ளது
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

20, 21 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே பதிவாக்கக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அதனையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட மழை பதிவு எதுவும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
http://imdchennai.gov.in/tamiltemp_max.pdf
அதிகபட்சமாக சேலத்தில் 101.84 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரை, கரூர், பரமத்தியில் வெப்பநிலை 99.5 டிகிரி பாரன்ஹீட் ஆக பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications