வதைக்கும் வெயிலுக்கு கொஞ்சம் ஓய்வு! இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? ஆய்வு மையம் தந்த அப்டேட்
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் முழுமையான கோடைக் காலம் துவங்க இன்னும் ஒரு மாத கால இடைவெளி இருக்கும் நிலையில்
அக்னி நட்சத்திரம் தொடங்கியது போல தற்போதே தமிழகம் முழுவதும் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.
பகல் நேரங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் இரவு நேரங்களிலும் அனல் காற்றால் மக்கள் தவித்து வரும் நிலையில், கடந்த இரு நாட்களாக அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில்,"தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வானிலை ஆய்வு மையம் தகவல்
நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், 11.04.2022: தென் தமிழகம், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதிகபட்ச வெயில்
12ஆம் தேதி தென் தமிழகம், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானல் (திண்டுக்கல்) 7, சாத்தூர் (விருதுநகர்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), நெய்வேலி (கடலூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), மீமிசல் (புதுக்கோட்டை), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 5, பெரியாறு (தேனி), கயத்தாறு (தூத்துக்குடி), குறிஞ்சிப்பாடி (கடலூர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), போடிநாயக்கனூர் (தேனி), புவனகிரி (கடலூர்), தலா 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
மீனவர்களுக்கான எச்சரிக்கை படி, 09.04.2022,10.04.2022: தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 09.04.2022: கேரள கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.











Click it and Unblock the Notifications