50 கிமீ வேகத்தில் சூறாவளி.. அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் இங்கெல்லாம் வெளுக்க போகுது மழை
சென்னை: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள், கேவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதேபோல் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லார் (கோவை), வால்பாறை (கோவை) தலா 9 செ.மீ, சின்கோனா (கோவை)8 செமீ, வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் (கோவை) 7 செமீ, சித்தார் (கன்னியாகுமரி) 6 செமீ, தேவலா(நீலகிரி), சோலையார் (கோவை) தலா 5 செமீ, உதகமண்டலம் (நீலகிரி), குடவாசல் (திருவாரூர்), மேல் பவானி ( நீலகிரி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 4 செமீ, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), பெரியார் (தேனி), பெங்கலூர் (புதுக்கோட்டை), ஆர்எஸ் மங்களம் (ராமநாதபுரம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), தேக்கடி(தேனி) தலா 3 செமீ மழை பெய்துள்ளது.
மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் அந்தமான், மன்னர் வளைகுடா, கடலோரா கேரளா,கர்நாடகா லட்சத்தவு மற்றும் மாலத்தீவ பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications