மகாவிஷ்ணு குருஜியாம்.. தூக்கியடிக்கப்பட்ட சிஇஓ மார்க்ஸ்! சாட்டையை சுழற்றிய பள்ளிக் கல்வித் துறை!
சென்னை : சென்னை அரசு பள்ளியில் பிற்போக்குத்தனமாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு விவகாரத்தில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் நடத்திய விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு முன்பாக தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார்.

அப்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய அவர் கடந்த ஜென்மத்தில் பாவ புண்ணியங்களை அடிப்படையில்தான் இந்த ஜென்மத்தில் நாம் பிறந்திருக்கிறோம்.. மாற்றுத்திறனாளிகள் ஏழைகள் அப்படி பிறந்தவர்கள் தான் என்ற ரீதியில் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அப்போது அங்கிருந்து அனைவரும் அமைதியாக இருந்த நிலையில் மாற்றுத்திறனாளியான ஆசிரியர் சங்கர், அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பள்ளிக்கூடத்தில் ஆன்மீகம் போதிக்கிறீர்கள்.. மறுபிறவி பாவ புண்ணியம் பற்றி பேசுவது என்ன நியாயம்? என வாக்குவாதம் செய்தார். இதை அடுத்து அவரை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மகாவிஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார்.
இதை அடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அவருக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆவேசமாகக் கூறினார். மேலும் மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக மகாவிஷ்ணு மீது சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த சிலர் புகார் அளித்தனர்.
இதனையடுத்து மகாவிஷ்ணு மீது ஐந்து பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் 192, 196 (1) ஏ, 352, 353 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழகம் திரும்பிய மகாவிஷ்ணுவை கைது செய்த சைதாப்பேட்டை போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து நீதிபதி மகாவிஷ்ணுவை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து புழல் சிறையில் மகாவிஷ்ணு அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே மகாவிஷ்ணுவை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து 3 நாட்கள் மகாவிஷ்ணுவை விசாரிக்க அனுமதி கிடைத்தது. இதனையடுத்து திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மகாவிஷ்ணுவிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், தான் தவறு செய்யவில்லை என்றும் சித்தர்கள் தன்னிடம் சொன்னதை பேசியதாகவும் மகாவிஷ்ணு கூறியதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் சென்னை மாவட்ட கல்வி அலுவலரான மார்க்ஸ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். மகாவிஷ்ணுவை பள்ளியில் பேச அனுமதித்தது யார்? என்பன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டிருந்தார். இதை அடுத்து அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரான கண்ணப்பன் விசாரணை நடத்தினார்.
விசாரணை முடிவடைந்த நிலையில் இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து இந்த அறிக்கையின் அடிப்படையில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான மார்க்ஸ் தஞ்சாவூர் சரபோஜி நூலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
மகாவிஷ்ணுவை குருஜி என குறிப்பிட்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு என தனியாக ஒரு வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பித்து மகாவிஷ்ணுவை பேச வைத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து மற்ற பள்ளிகளில் மகாவிஷ்ணு பேசவில்லை எனவும், இல்லையென்றால் மேலும் பதினைந்து பள்ளிகளில் மகாவிஷ்ணுவை பேச வைக்க மார்க்ஸ் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கும் நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியையும் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications