சந்தா கட்டுனீங்களா? பள்ளியில் இறந்த சிறுவன்.. புதைக்க இடம் தராத கிறிஸ்தவ சபைகள் .. கண்ணீருடன் தாய்.!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் பள்ளி பேருந்து மோதி சிறுவன் பலியான நிலையில் அவனது உடலை புதைக்க கூட சென்னையில் உள்ள கிறிஸ்தவ சபைகள் இடம் தரவில்லை எனவும், அவரது தாயார் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரது மகன் தீக்சித், ஆழ்வார் திருநகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று வழக்கம்போல், பள்ளி வேனில் பள்ளிக்கு வந்த மாணவன் வேனில் இருந்து இறங்கிய நிலையில் பள்ளி வேனை நோக்கி மீண்டும் திரும்பி வந்துள்ளார்.

மாணவன் பலி

மாணவன் பலி

அப்போது, வேனை பார்க்கிங் செய்வதற்காக வாகன ஓட்டுநர் பூங்காவனம் வேனை ரிவர்ஸ் எடுத்துள்ளார். இதனால், வேனில் ஏற முயற்சித்த மாணவர் தீக்சித் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவர் தீக்சித் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இதையடுத்து, மாணவரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வளசரவாக்கம் போலீசார், வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்தனர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் , பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது.

தாய் புகார்

தாய் புகார்

இந்நிலையில் பள்ளி பேருந்து மோதி சிறுவன் பலியான நிலையில் அவனது உடலை புதைக்க கூட சென்னையில் உள்ள கிறிஸ்தவ சபைகள் இடம் தரவில்லை எனவும், அவரது தாயார் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.-"நான் கிறிஸ்டியன். எனது கணவர் இந்து. என் பையன் இரண்டு மதத்தையும் விரும்புவான். ஆனால் ஜீசஸை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால், உடலை அவனுக்கு பிடித்தப்படி புதைக்கலாம் என்பதற்காக அருகிலுள்ள ஆர்.சி சபைக்கு போன் போட்டு கேட்டேன். அதற்கு நீங்கள் சந்தா கட்ட வேண்டும்.

புதைக்க இடமில்லை

புதைக்க இடமில்லை

அதனால் குழந்தையை புதைக்க இங்கே இடம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். இதையடுத்து, சிஎஸ்ஐ சபையிடம் அணுகியபோது, நீங்கள் சிஎஸ்ஐ என்பதை உறுதி செய்ய மதுரையில் இருந்து சான்றிதழ் வாங்கி வந்தால், புதைக்க இடம் தருகிறோம் என்கின்றனர். நாங்கள் ஊர் ஊராக பணி நிமித்தம் டிரான்ஸ்பர் ஆனோம். ஆனால் இப்படி ஒரு கட்டத்தில் கூட கிறிஸ்தவ சபைகள் இடம் தர மறுத்தது வேதனையளிக்கிறது " என பேசினார். இந்த வீடியோ தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது..

மாணவனின் இறுதி ஊர்வலம்

மாணவனின் இறுதி ஊர்வலம்

இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு பிறகு சிறுவனின் உடலை வளசரவாகத்தில் உள்ள கல்லறையில் புதைக்க இடம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து சிறுவன் தீக்சித்தின் இறுதி ஊர்வலம் இன்று காலை தொடங்கியது. வீட்டிலிருந்து எடுத்து செல்லப்பட்ட சிறுவனின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் வைத்து பிரார்த்தனை முடிந்த பிறகு வளசரவாக்கத்தில் உள்ள கிறிஸ்துவ கல்லறையில் அடக்கம் செய்யப்பட உள்ளது .இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+